நள்ளிரவில் பிரசவ வலி..! அலறிய கர்ப்பிணி..! ரோந்து வாகனத்தை ஆம்புலன்சாக மாற்றிய போலீஸ்..! சென்னையில் நெகிழ வைக்கும் சம்பவம்!

சென்னை ஆதம்பாக்கத்தில் நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கர்ப்பிணி பெண்மணி ஒருவருக்கு மருத்துவமனை செல்ல உதவி செய்த சம்பவம் இணையத்தில் தீயாய் பரவுகிறது.


தற்போது நிலவி வரும் கொரோனா ஊரடங்கால் பொது மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தாலும், மருத்துவர்கள் மற்றும் போலீசார் தினமும் பணிக்கு சென்று கொரோனா தடுப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மக்களுக்காக ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக காவல் துறையினர் பகல் இரவு பாராமல் ரோந்து பணிகளில் ஈடுபட்டு கிடைத்த உணவை உண்டு ஊரடங்கை முறையாக செயல்படுத்த உதவுகிறார்கள்.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் போது ஏராளமான காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்கள் அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஊரடங்கை முறையாக செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும்போது கர்ப்பிணி பெண் ஒருவருக்கு உதவி செய்த சம்பவம் பெரும் வைரலாக பரவி வருகிறது.

 நேற்று இரவில் ஆதம்பாக்கம் பகுதியில் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். அந்நிலையில் அந்த பகுதியில் தவித்த கர்ப்பிணி பெண்ணை போலீஸார் தங்களது ரோந்து வண்டியின் மூலம் மருத்துவமனையில் சேர்த்து உதவியுள்ளார்கள்.காவல் துறையினரின் இந்த மனிதாபமான செயல் மனதை நெகிழ வைத்துள்ளது .