பெண் தோழியுடன் திருச்சி டூ புதுக்கோட்டை..! காரில் அதிவேகம்..! எதிரே வந்த ஜேசிபி..! மோதி சிதைந்த போலீஸ்காரர்! அதிர வைத்த விபத்து!

திருச்சியில் பணிபுரியும் காவலர் தனது பெண் தோழி மற்றும் பெண் தோழியின் குழந்தையுடன் காரில் புதுக்கோட்டை சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்து ஜேசிபி நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே காவலர் உயிரிழந்தார்.


திருச்சியில் பணிபுரியும் காவலர் மனோ என்பவர் தனது பெண் தோழி மற்றும் பெண் தோழியின் குழந்தையுடன் தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அம்மாசத்திரம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது அப்போது எதிரே வந்த ஜேசிபி காருடன் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த காவலர் மனோ என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த பெண் தோழி மற்றும் பெண் தோழியின் குழந்தை காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் பலியான காவலர் மனோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பயங்கர விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.