அம்மா..! என்கிட்ட நம்ம மாமா அப்படி செஞ்சார்..! மகள் கூறிய பகீர் தகவல்! பதறிப்போன தாய் செய்த செயல்!

12 வயது இளம்பெண்ணை காவல்துறை காண்ஸ்டபிள் கற்பழித்துள்ளார் சம்பவமானது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹைதராபாத் மாநகரில் ராம்கோபால்பேட் பகுதியில் இயங்கிவரும் காவல் நிலையத்தில் உமேஷ் என்ற கான்ஸ்டபிள் பணியாற்றி வருகிறார். இவர் போபனவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வீட்டை சேர்ந்த இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியான சில்மிஷங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

2 மாதங்களுக்கு முன்னர் 12 வயதான இளம்பெண்ணை இவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நிகழ்ந்தவற்றை வெளியே கூறினால் நிச்சயமாக கொலை செய்து விடுவேன் என்று அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். பயந்துபோன இளம்பெண் மிகுந்த தயக்கத்துடன் தன்னுடைய தாயிடம் நிகழ்ந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார்.

உடனடியாக இளம்பெண்ணின் தாயார் இந்த சம்பவத்தை சிறுவர்கள் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அவர்கள் உடனடியாக காவல்த்துறை மேலதிகாரிகளிடம் புகாரளித்துள்ளனர். சென்ற வாரம் வியாழக்கிழமையன்று காவல் நிலையத்தில் உமேஷ் மீது புகாரளிக்கப்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து ஹைதராபாத் மாநகர காவல்துறை ஆணையர் கூறுகையில், "அனைத்தும் சட்டத்திற்கு கீழே. கான்ஸ்டபிள் கைது செய்யப்பட வேண்டியது அவசியமாக இருந்தது. அவர் தற்போது சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். எங்களுடைய துறையிலேயே இதுபோன்ற நபர்கள் எடுப்பது வெட்கம் அடைய செய்கிறது" என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது ஹைதராபாத் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.