10 சொகுசு வீடுகள்..! 30 இளம் பெண்கள்..! குமரிகள் To ஆன்டிகள்..! வயதுக்கு ஏற்ப ரகரகமாக விஐபி கஸ்டமர்கள்! தஞ்சையின் விபச்சார சாம்ராஜ்யம்!

தஞ்சையில் 10 சொகுசு வீடுகள் மூலமாக 30 இளம்பெண்களை பயன்படுத்தி விபச்சாரம் செய்து வந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


தஞ்சாவூரில் கீழவீதியில் காதிகிராப்ஃட் கடை நடத்தி வருபவர் செந்தில்குமார். இவரது முதல் மனைவி தஞ்சாவூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்ததால் செந்தில் குமாருக்கு போலீசாருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே செந்தில்குமாருக்கு கணவரை பிறந்து வாழும் ராஜம் என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் செந்தில் குமார் மற்றும் அவரது முதல் மனைவி இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இதனால் செந்தில்குமார் ராஜம் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த தம்பதியருக்கு ஏற்கனவே பாலியல் தொழில் நடத்தி வந்த கலைவாணி என்ற பெண்ணுடன் கிடைத்த நட்பின் காரணமாக செந்தில்குமார் ராஜம் தம்பதியினரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டனர். செந்தில் குமார் தனது முதல் மனைவி மூலமாக ஏற்கனவே போலீசாருடன் இருந்து வந்த நெருங்கிய நட்பை பயன்படுத்தி இந்த பாலியல் தொழிலை விரிவுப்படுத்தியுள்ளார். எஸ் ஐ நண்பரான பிரபாகரன் என்பவர் இந்த தொழிலுக்கு மிகவும் உதவி செய்துள்ளார்.

இந்நிலையில் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரபாகரன் பின்னர் முழு நேர பாலியல் தொழிலில் அவர்களுடன் இணைந்துள்ளார். இந்த கும்பல் மேலும் சிலரை தங்களுடன் நினைத்துக் கொண்டு பாலியல் தொழிலுக்காக கர்நாடகம் ,ஆந்திரா ,மேற்கு வங்கம் ,தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து சுமார் 30 பெண்களை வரவழைத்துள்ளனர். அவர்களை தங்க வைப்பதற்காக வீட்டின் உரிமையாளர்கள் அருகே இல்லாதவாறு உள்ள வீடுகளை தேடி வாடகை எடுத்துள்ளார்கள். 

நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் தருவதாக கூறி அந்த இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள். செந்தில்குமார் மற்றும் ராஜம் தம்பதியினர் பாலியல் தொழில் செய்வதற்காகவே ஒரு டைரியை பயன்படுத்தி வந்துள்ளார்கள். அந்த டைரியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் போன் நம்பர் மற்றும் சுமார் 1000 கஸ்டமர்களின் நம்பர்கள் அதில் குறித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த டைரியை ஆராய்ந்ததில் தஞ்சாவூரிலுள்ள சில முக்கிய விஐபிகள் மற்றும் சில அரசியல் பிரமுகர்கள் கஸ்டமர்களாக இருந்து வந்திருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல் பாலியல் தொழில் செய்வதற்காக உயர் ரக கார் ஒன்றையும் படுக்கை வசதி கொண்டதாக மாற்றி பாலியல் தொழில் செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு திருப்பூரை சேர்ந்த சதீஷ் என்பவரும் பெங்களூருவை சேர்ந்த சுகுமாரன் என்பவரும் ஏராளமான பெண்களை பாலியல் தொழிலுக்காக சப்ளை செய்து வந்துள்ளார்கள். இவர்கள் தங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தஞ்சாவூரில் பைனான்ஸ் மற்றும் டிராவல்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் செந்தில்குமார் ராஜம் தம்பதியினர், லஞ்ச வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், ராமச்சந்திரன் பழனிவேல் என 5 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது விபச்சார தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிலில் பல பெண்கள் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதால் இந்த கும்பல் மீது கற்பழிப்பு மற்றும் கொலை முயற்சி வழக்குகளும் போடப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.