பாஜக சாமியார் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கைது! மிரட்டி பணம் பறித்தாராம்..!

சின்மயானந்த் மீது வழக்கு தொடர்ந்த இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருப்பது உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாஜக தலைவர்களுள் மிகவும் முக்கியமானவர் சின்மயானந்த். இவர் பல கல்லூரிகளை நடத்தி வருகிறார். இவருடைய வயது 72. ஷாஜஹான்பூரிலுள்ள இவருடைய கல்லூரியில் பயிலும் மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். 

பாதிக்கப்பட்ட மாணவி ஃபேஸ்புக்கில் சின்மயாநந்த் மீது புகார்களை பரப்பினார். காவல்துறையினர் தேடி அலைந்ததில் அந்த பெண்ணை கண்டு பிடித்தனர்.  உடனடியாக அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் கூறுகையில், " என்னை முதன்முதலில் சின்மயாநந்த் பாலியல் வன்கொடுமை செய்தபோது காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

ஆனால் காவல் என்னை கொன்று விடுவதாக மிரட்டினர். அதனால் ஃபேஸ்புக்கில் பதிவு செய்த உடனே நான் தலைமறைவாகி விட்டேன். மேலும் என்னுடைய விடுதி அறையை சீல் வைத்துள்ளனர். அதனை ஊடகத்தின் முன்னர் திறக்க வேண்டும். எனக்கு 200 முறைக்கு மேல் போன் செய்து அவருக்கு மசாஜ் செய்துவிடும்படி வற்புறுத்தினார்.என்னை மட்டுமின்றி பல பெண்களின் வாழ்க்கையையும் சின்மயானந்த அழித்துவிட்டார்" என்று கூறியிருந்தார். 

அடுத்த சில நாட்களிலேயே சின்மயானந்த் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கானது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது பாதிக்கப்பட்ட பெண் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தன்னிடம் இருந்து விக்ரம், சஞ்சய் சச்சின் ‌ ஆகிய 3 இளைஞர்களும் பணம் பறிக்க முயற்சித்ததாக சின்மயானந்த் வழக்குப் பதிவு செய்து இருந்தார்.

வழக்கை பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்த தொடங்கினர். ஒருவழியாக மூன்று இளைஞர்களையும் காவல் துறையினர் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம் மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போனை பறிமுதல் செய்த காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டனர். 

3 இளைஞர்களும் அந்த செல்போனை ராஜஸ்தான் மாநிலத்தில் வீசியதாக கூறியுள்ளனர். மேலும் இந்த வழக்கில் சின்மயாநந்த் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்த பெண்ணும் சம்பந்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கண்டுபிடித்தனர். 

கைது செய்யப்படுவதில் இருந்து விடுபடுவதற்காக அந்தப் பெண் முன்ஜாமீன் வழக்கு பதிவு செய்து இருந்தார். அந்த வழக்கானது நாளை விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் காவல்துறையினர் அவசர அவசரமாக இன்றே அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். மேலும் சின்மயானந்தாவிடமிருந்து பணம் பறிக்க முயற்சித்ததாக கூறப்படும் பெண்ணையும் காவல்துறையினர் ட்ரேஸ் செய்து வருகின்றனர்

இந்த சம்பவமானது உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.