நாகை சுற்றுவட்டார கிராமங்களில் அதிரடிப்படை திடீர் குவிப்பு! பெரும் பதற்றம்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்ற கரியாப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அதிரடிப்படை குவிப்பு பதட்டம்


நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினம் திலிருந்து திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் வரை 474 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக வேதாந்தா நிறுவனம் டெண்டர் போடப்பட்டு உள்ளது இதனால் தங்கள் பகுதியில் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் தங்கள் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்திவருகின்றனர்.

கரியாப்பட்டினம் கிராம மக்கள் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் கிராமத்தின் மையப்பகுதியில் நேற்று 7வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளர்களை அதிரடி படையினர் குறிவைத்து வீடுகள் புகுந்து கைது செய்தனர்

மேலும் கரியாப்பட்டினம் செம்போடை நெய்விளக்கு மருதூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிரடிப்படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு அங்குள்ள மக்களை சோதனை செய்வது என்ற பெயரில் மிரட்டி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

அமைதியாக மக்கள் போராடி வரும் நிலையில் திடீரென அதிரடிப்படியை குவித்து போலீசார் தங்களை அச்சுறுத்துவதாக அப்பகுதிவாசிகள் கூறியுள்ளனர். போலீசாரை எவ்வளவு குவித்தாலும் தங்களின் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.