என் உடம்புக்காக என்ன யூஸ் பண்ணிகிட்டாளுங்க..! நான் அவளுங்கள யூஸ் பண்ணுனேன்..! காசி கொடுத்த பகீர் வாக்குமூலம்!

என் உடம்புக்காக என்னை அந்தப் பெண்கள் யூஸ் பண்ணிக்கிட்டாங்க . ஆகையால் நானும் அவளுங்கள யூஸ் பண்ணிக்கிட்டேன் என்று நாகர்கோவில் காசி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.


நாள்தோறும் நாகர்கோவில் காசியின் விஷயம் விஸ்வரூபம் எடுத்த வண்ணம் உள்ளது. பள்ளி சிறுமிகள் முதல் இளம் பெண்கள் குடும்பப் பெண்கள் உள்ளிட்ட பலரையும் தன்னுடைய காம வலையில் சிக்கி அந்தரங்க வீடியோக்களை எடுத்து அதன் மூலம் பணம் பறித்து வந்த அவர்களை போலீசார் பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு முதலில் இந்த வழக்கை விசாரிக்க 3 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது. அந்த முதல் விசாரணையின் பொழுது காசி இடமிருந்து போலீசார் எதிர்பார்த்து தகவலை பெரிதாக பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.

அதனால் காசியை போலீசார் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இரண்டாவதாக விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இதனையடுத்து போலீசாருக்கும் 6 நாட்கள் காசியை விசாரணை செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. இதுவரை வழங்கப்பட்ட ஆறு நாட்களில் இரண்டு நாட்களுக்கான விசாரணை முடிவடைந்துள்ளது. விசாரணையின் போது போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு காசி மிகவும் கூலாக பதில் சொல்கிறார் என்று கூறப்படுகிறது. ஒரு சில கேள்விகளுக்கு காசி தன்னுடைய வாயை திறப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. சமீப நாட்களாகவே காசி பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் சமூகவலைதளத்தில் வெளியாகிய வண்ணம் உள்ளன.

அதாவது காசி இளம்பெண்கள் குடும்பப் பெண்கள் உட்பட பலருடன் உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். போலீசார் காசியின் லேப்-டாப்பில் இருந்த வீடியோக்களை காண்பித்து இதில் இடம்பெற்றிருக்கும் பெண்கள் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 

அந்த வீடியோக்களை பார்த்த காசி குஷி ஆகி சிரித்து இருக்கிறாராம். அவங்க எல்லாரும் என்னோட ஜாலியா இருந்த பெண்கள் என்று காசி கூறியிருக்கிறார். மேலும் எத்தனையோ பெண்கள் என்னோட ஜாலியா இருக்கணும்னு வந்தாங்க.. எல்லாம் என்னால லிஸ்ட் போட்டு சொல்ல முடியாது.. ஆனா நானா போய்ப் யாரையுமே ஏமாத்தல.. அவங்களா தேடித்தான் என்கிட்ட வந்தாங்க..என் உடம்புக்காக என்ன அவங்க யூஸ் பண்ணிகிட்டாளுங்க..நான் அவளுங்கள யூஸ் பண்ணுனேன்..அவ்ளோதான். கூடவே கொஞ்சம் பணம் தேவை இருந்தது ஆகையால் அதை வைத்து அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டேன் என்று காசி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

தற்போது போலீசாரிடம் நான்கு நாட்கள் மட்டுமே காசியை விசாரிப்பதற்கு அவகாசம் உள்ளது. வரும் நான்கு நாட்களிலாவது போலீசாரின் கேள்விகளுக்கு பதில் கூறுவாரா காசி? என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.