என்ன பெத்த தாய் நீ! பெண் போலீஸ் அதிகாரியை கட்டி அணைத்து கதறிய மூதாட்டி! நெகிழ வைக்கும் காரணம்!

கேட்பாரற்ற முதியவருக்கு காவல்துறை அதிகாரி உதவியிருக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மத்தியபிரதேச மாநிலத்தில் தமாஹோ என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட மார்கோன் என்னும் பகுதியில் ஷர்தா ஷுக்லா என்பவர் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 

இவர் கண்காணிக்கும் பகுதியில் மூதாட்டி ஒருவர் யாருடைய உதவியுமின்றி தன்னந்தனியாக தவித்து வந்துள்ளார். சாலையோரத்தில் வசிக்கும் அந்த மூதாட்டியை ஷுக்லா நிறைய முறை அங்கு பார்த்துள்ளார். அந்த மூதாட்டியின் சிரமத்தை எண்ணி வருத்தப்பட்ட ஷுக்லா, அவருக்கு புது உடை மற்றும் காலணி வாங்கி கொடுத்துள்ளார். இதனை பெற்றுக் கொண்ட அந்த மூதாட்டி கண்ணீர் மல்க ஆர்ப்பரிக்க தொடங்கினார். ஷுக்லாவை கட்டிப்பிடித்து கொண்டு கதறி அழுதார்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய மத்திய அமைச்சருமான பிரித்விராஜ் சௌஹான் இந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். " சர்தா ஷுக்லாவை பார்த்து மத்திய பிரதேச மாநில மக்கள் பெருமைப்படவேண்டும்" என்று பதிவு செய்திருந்தார்.

இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.