ஆன்லைனில் விஷம் வாங்கி மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்! ஆசை நாயகியை கரம்பிடிக்க கொடூரம்!

ஆன்லைனில் விஷம் வாங்கி, அதை உணவில் கலந்து தனது மனைவியை பேராசிரியர் ஒருவர் கொலை செய்துள்ளார்.


தக்கலை அருகே உள்ள வெள்ளியோடு பகுதியை சேர்ந்தவர் பெல்லார்மின். கல்லூரி பேராசிரியரான இவர், வியன்னூர் பகுதியை சேர்ந்த பேராசிரியை திவ்யா என்பவருக்கும் சில மாதங்கள் முன்பாக, திருமணம் நடைபெற்றது. ஆனால், வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்த பெல்லார்மினுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. 

திருமணம் ஆன நாள் முதலாக, தன்னை விட்டு பிரிந்துசெல்லும்படி, மனைவி திவ்யாவை, பெல்லார்மின் வலியுறுத்தி வந்துள்ளார். இதனால், இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதன்பேரில், இருவீட்டாரும் சேர்ந்து சமாதானம் செய்து வைத்தும் உள்ளனர். இந்நிலையில், சில நாள் முன்பாக, திவ்யா ரத்த வாந்தி எடுத்து, உயிரிழந்தார். 

அதிர்ச்சி அடைந்த திவ்யாவின் பெற்றோர் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில், பெல்லார்மினை கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரித்தனர். அதில், ஆன்லைனில் விஷம் வாங்கி, அதை உணவில் கலந்து திவ்யாவுக்கு கொடுத்ததாக பெல்லார்மின் ஒப்புக் கொண்டார். இதன்பேரில், அவரை போலீசார் கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மனைவி தடையாக இருந்ததாகவும்,விவாகரத்து கேட்டும் கொடுக்காத காரணத்தினால் கொலை செய்ததாகவும் பேராசிரியர் திடுக் தகவலை வெளியிட்டுள்ளார்.