கோழிக் கழிவில் விஷம்! கொத்து கொத்தாக செத்து விழுந்த நாய்கள், ஆடுகள்! ஊட்டியை உலுக்கிய சம்பவத்தின் பகீர் பின்னணி..!

குன்னூர் ஓட்டுப்பட்டுரை கிராமத்தை ஓட்டி உள்ள குப்பைக்கிடங்குப் பகுதிக்கு உணவு தேடி வரும் நாய், பூனை, காட்டுப்பன்றி, காகம் உள்ளிட்ட விலங்குகள் வருவதை பிடிக்கமால் கோழிக்கழிவில் விஷம் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற செய்தி கடந்த 6ம் தேதி காலைப்பொழுது குன்னூர் மக்களை மட்டும் அல்ல ஒட்டுமொத்த விலங்கு நேசர்களையும் அதிர்ச்சியில் உறையச்செய்துள்ளது.


நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட ஓட்டுப்பட்டுரை குப்பைக்கிடங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாய், பூனை, காட்டுப்பன்றி, காகம் உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் திடீரென மயங்கிச் சுருண்டு விழுந்தன. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மக்கள் கால்நடை மற்றும் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த மண்டலக் கால்நடைத் துறை இணை இயக்குநர் மற்றும் குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துவந்து பார்த்தனர். அங்கு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த விலங்குகளுக்குத் தண்ணீர் மற்றும் முதலுதவிகளைச் செய்தனர். ஆனால் எதுவும் பலனளிக்காமல் ஒவ்வென்றாகக் கண்முன்னே சுருண்டு விழந்தன. அதில் குறிப்பாக 6 நாய், 4 காகம், ஒரு பூனை, காட்டுப்பன்றி உள்ளிட்டவை இறந்தன.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வனதுறையினர் விசாரணை மேற்கொண்டனர், அதில் இதுகுறித்து உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், குப்பைக்கிடங்கு அருகில் வசம்பள்ளம், வாசுகி நகர், வள்ளுவர் நகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதே பகுதியில் குன்னூர் நகராட்சியின் குப்பைக்கிடங்கும் உள்ளது. குன்னூர் நகரில் சேகரமாகும் குப்பைகள் இங்கு கொண்டுவந்து கொட்டப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

பொதுவாக, இந்தக் குப்பைகளில் உள்ள இறைச்சிக் கழிவுகள், காய்கறி மற்றும் பழம் உள்ளிட்ட உணவுக் கழிவுகளை உன்ன வன விலங்குகளும் வளர்ப்புப் பிராணிகளும் இப்பகுதிக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், கொரோனாவால் தற்போது உள்ள ஊரடங்கின் காரணமாக மக்கள் நடமாட்டமும் குறைந்துள்ளது. உணவுக்காக நாய், பூனை போன்றவை உணவு தேடி அதிகளவு இந்த குப்பை கிடங்குக்கு வந்து இருக்கும். இது பிடிக்காத யாரோ சிலர் உணவில் விஷம் வைத்துக் கொன்றுள்ளனர் என்ற தகவலும் உலா வருகின்றது.

இந்த விசாரணை அடுத்து, இறந்த கிடந்த விலங்களை பற்றி கால்நடைத்துறையினரிடம் கேட்கயில், அவர்கள் இறந்த விலங்குகளின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு மேற்கொண்ட மாதிரிகளைச் சோதனைக்கு அனுப்பி உள்ளனர். அந்த சோதனையின் முடிவுகள் அடிப்பிடையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.