நாம் அன்றாடம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் 16 வகையான நச்சுப்பொருள்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றார், சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.
நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்டில் கலந்திருக்கும் விஷம்..! நாக்கின் கீழ் இருக்கும் ரத்த குழாய்களுக்கு ஆபத்து! பரபர ரிப்போர்ட்!
மேலும் டூத் பேஸ்ட், சோப்பு, ஷாம்பூ ஆகியவை சருமத்தின் வழியாக நம் உடலுக்குள் சென்று பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக சித்த மருத்துவர் செல்வ சண்முகம் தெரிவித்துள்ளார். பேஸ்ட்டால் பல்லைத் தேய்த்துவிட்டு நுரையைத் துப்பிவிடுவதால், எந்தப் பாதிப்பும் இல்லை என்று நினைக்க வேண்டாம்.
நாக்கின் கீழிருக்கும் ரத்தக்குழாய்கள், பேஸ்ட்டில் உள்ள நச்சுக்களை உடனே கிரகிக்கும் திறன் கொண்டவை. இதனால், நாள்பட்ட நோய்கள் ஏற்படும். ஹார்மோன் உற்பத்தியையும்கூட அவை பாதிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றார். சோப்பு, ஷாம்பூ ஆகியவையும் சருமத்தின் வழியாக உடலுக்குள் சென்று பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
எனவே பல் துலக்கவும் குளிக்கவும் மூலிகைப் பொருள்களையே உபயோகிக்க வேண்டும் என அறிவுரை கூறுகிறார். கிராம்புத்தூள் 5 கிராம், கல் உப்புத்தூள் அல்லது படிகாரம் 5 கிராம் ஆகியவற்றை 100 கிராம் திரிபலா சூரணத்துடன் சேர்த்து, காலை மாலை இரு வேளையும் பல் துலக்கலாம். இந்தப் பொடியை நாள்தோறும் உபயோகித்து வர, பற்களின் நலன் பாதுகாக்கப்படும்.
சீயக்காய், காய்ந்த நெல்லிக்காய், வெந்தயம், பாசிப்பயறு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்த பொடியை ஷாம்புக்கு பதில் வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்து குளிக்கலாம். சோப்புக்குப் பதிலாக, நலங்கு மாவைப் பயன்படுத்தலாம். பாசிப்பயறு, வெட்டிவேர், கார்போக அரிசி, சந்தனத்தூள், பூலாங்கிழங்கு, விலாமிச்சை வேர் ஆகியவற்றை சேர்த்துப் பொடியாக்கி, தினமும் குளியல்பொடியாகப் பயன்படுத்தலாம்.
இந்தப் பொடியைத் தயாரிக்க இயலாதவர்கள், 100 கிராம் பாசிப்பயறு, காய்ந்த எலுமிச்சம்பழத் தோலில் எடுக்கப்பட்ட பொடி 10 கிராம் சேர்த்து, சோப்புக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்" என்று கூறுகிறார் சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.