4 நாட்களாக மாயமான பிரபல பாடகி சுசித்ரா! கண்டுபிடித்து மனநல மருத்துவமனையில் சேர்த்த போலீஸ்! பரபர பின்னணி!

கடந்த சில நாட்களாக காணாமல் போய்விட்டதாக கூறப்பட்டு வந்த பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.


கடந்த வருடம் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபல நடிகர் நடிகைகளின் அந்தரங்கங்கள் சமூக வலைத் தளத்தில் வெளியானது. இதற்கு பின்னணியாக பிரபல பாடகி சுசித்ரா இருந்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், பாடகி சுசித்ரா அதை முற்றிலுமாக மறுத்தார்.

ஆனால் இந்த சுச்சி லீக்ஸ் காரணமாக அவர்களது குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வந்தன. இதனால் பாடகி சுசித்ராவின் கணவரான, யாரடி நீ மோகினி புகழ் நடிகர் கார்த்திக் தனது மனைவி சுசித்ராவை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்தார்.

இதனால் தனிமைக்கு தள்ளப்பட்ட பாடகி சுசித்ரா, சென்னை அடையாறில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக பாடகி சுசித்ராவை காணவில்லை என அவரது சகோதரி போலீசில் புகார் அளித்திருந்தார்.

சுசித்ராவின் சகோதரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துவங்கினர். அதற்குப் பின்பு சுசித்ராவின் செல்போன் எண்ணை டிராக் செய்து அவர் சென்னை தியாகராய நகரில் அமைந்திருக்கும் விடுதி ஒன்றில் இருப்பதாக கண்டறிந்தனர். இதனையடுத்து போலீசார் சுசித்ரா தங்கியிருந்த விடுதியை சோதனையிட்டனர். 

இதனையடுத்து அந்த விடுதியிலிருந்து பாடகி சுசித்ரா போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டார் அப்பொழுது தன் தங்கையை பார்த்து மிகவும் சத்தமாக கூச்சலிட்டு இருக்கிறார். மேலும் தன்னுடைய குடும்பம் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சித்தரிப்பதாகவும் தன்னை ஏதாவது செய்து விடுவார்கள் எனவும் அச்சமாக இருப்பதாகவும் போலீசாரிடம் பாடகி சுசித்ரா கூறினார்.

பின்னர் போலீசார் பாடகி சுசித்ராவை அங்கிருந்து மீட்டு வந்து கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் அவரது விருப்பப்படி அனுமதித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.