எத்தனை முறை சொல்றது..! அந்த உறுப்பு புகைப்படங்களை அனுப்பும் ஆண்கள்..! காசி தொடர்பில் சின்மயி வெளியிட்ட பகீர்..!

நாகர்கோவில் காசியை குறித்து பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய பதிவு சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.


சின்மயி தென்னிந்தியாவில் மீ டூ இயக்கத்தின் தீவிர முன்னோடியாக இருந்து வருகிறார். அது மட்டுமில்லாமல் பல பெண்களின் வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பற்றி அந்த பெண்களின் சார்பாக தன்னுடைய சமூக பக்கங்களின் வழியாக பகிர்வதை தன்னுடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறார் சின்மயி. இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பாக நாகர்கோவில் காசியைப் பற்றி தகவலை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.  

தொடர் பாலியல் குற்றங்களை செய்து வந்த காசியை பற்றி ஏற்கனவே சின்மயி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் மூலம் பகிர்ந்த தகவலை கவனத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருந்து இருந்தால் காசியின் முகத்திரையை அப்போதே கிழித்து எறிந்து இருக்கலாம். இதனை வைத்துப் பார்க்கும் பொழுது காசி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சற்று தாமதமாக உள்ளது எனவும் பாடகி சின்மயி கூறியிருக்கிறார். காதல் என்ற போலி காரணத்தைக் கூறி நாகர்கோயில் காசி மேலும் மூன்று கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து மோசடி செய்ததாக இன்று மற்றொரு அதிர்ச்சிக்குரிய தகவல் வெளிவந்துள்ளது. டிக் டாக், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்களைப் பயன்படுத்தி இளம் பெண்களை தொடர்பு கொள்வதும் அவர்களுடன் நட்பு கொள்வதும், பின்னர் அதீத அன்பை காட்டி பொய்யான காதலை வெளிப்படுத்தி சந்திக்க அவர்களை சமாதானப்படுத்துவதும் அவனது செயல்முறையாகும்.

காசியின் சுயரூபத்தை அறியாத அந்த இளம் பெண்கள் அவன் கூறிய இடத்திற்கு சென்றுள்ளனர். தனது சந்திப்பின் போது காசி, கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் போது அந்த இளம் பெண்களுக்கே தெரியாமல் அந்தரங்க வீடியோக்களையும் புகைப்படங்களையும் காசி எடுத்து வைத்திருக்கிறான். பின்னர் சில நாட்களுக்குப் பிறகு , அவர்களுக்கு தெரியாமல் பதிவுசெய்த நெருக்கமான தருணங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கொண்டு அவர்களை பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருந்திருக்கிறான் காமகொடூரன் காசி. 

இதுகுறித்து பாடகி சின்மயி தற்போது வெளியிட்டுள்ள பதிவில், இம்மாதிரியான காம கொடூரர்களின் செயல்கள் மற்றும் அவர்கள் வெளியிடும் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை பற்றி பலரும் ஆன்லைன் மூலம் தங்களுடைய புகாரை பதிவு செய்து வருகிறோம். ஆகையால் இம்மாதிரியான நபர்கள் மீது சைபர் கிரைம் முறையான விசாரணை நடத்தி தகுந்த தண்டனையை அவர்களுக்கு பெற்று தரவேண்டும். அப்போதுதான் இம்மாதிரியான குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.