அந்த விஷயத்துக்காக ஷிப்பிங் கம்பெனி வேலையை விட்டாங்க! இப்போ உயிரையே விட்டுட்டாங்க! நெஞ்சை உலுக்க வைத்த அனீஸ் பாத்திமா!

விமான ஓட்டுநர் ஒருவர் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவமானது ஒரிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒரிசா மாநிலத்தில் பிர்சாலா என்ற இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் மாநில அரசின் விமான பயிற்சி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் அனீஸ் ஃபாத்திமா என்ற பெண் பயின்று வந்தார். இவர் சென்னையை சேர்ந்தவராவார். இவருடைய தந்தை காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஒரு சகோதரர் உள்ளார். இருவருக்கும் 7 ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது. இவர் சென்னை புறநகரில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியராக தேர்ச்சி பெற்றவர். கல்லூரி காலத்திலிருந்து விமான பைலட் ஆக வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தார்.

ஆனால் என் ஆசைக்கு அவருடைய குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை. அனீஸ் பாத்திமாவின் தந்தை அடுத்த சில மாதங்களிலேயே இயற்கை எய்தினார். அப்போது அனீஸ் பாத்திமா மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்து எம்பிஏ படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

அடுத்த சில மாதங்களிலேயே தன்னுடைய வேலையை விட்டுவிட்டு, மீண்டும் பைலட்டாக வேண்டும் என்று நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். ஆனால் இம்முறை அவருடைய தாயாரும், சகோதரரும் அவருடைய கனவுக்கு முட்டுக்கட்டையாக இருக்காமல் உற்சாகப்படுத்தினர்.

சென்ற ஆண்டு இறுதியில் விடுமுறையில் பாத்திமா சென்னைக்கு வந்தார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய விழாக்களை கொண்டாடிவிட்டு, ரமலான் பண்டிகை போது வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் ஊரடங்கு காலமென்பதால் அவரால் சென்னைக்கு வர இயலவில்லை.

இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் பழுதடைந்த விமானத்தை அனீஸ் ஃபாத்திமா ஓட்ட முயற்சி செய்துள்ளார். அப்போது விமானத்தின் பவர் டெலிவரி சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அந்த விமானம் விபத்துக்குள்ளானது. விமான விபத்தில் பாத்திமா உயிரிழந்தார். இந்த செய்தி வந்தது சென்னையில் அவருடைய குடும்பத்தினரை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.