10 மணி நேர தொடர் கொரோனா டூட்டி..! கிளவ்ஸ்களை கழட்டிய பிறகு..! பிரபல டாக்டர் வெளியிட்ட நெஞ்சை உலுக்கும் புகைப்படம்!

தொடர்ந்து 10 மணி நேர கொரோனா டூட்டிக்கு பிறகு மருத்துவர் ஒருவர் கை கிளவ்ஸ்களை கழட்டிய பிறகு அவரது உள்ளங்கை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை உணர்த்தும் நெஞ்சை உலுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது


கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. மார்ச் மாத இறுதியில் இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. நாளாக நாளாக கொரோனா வைரசின் தாக்கம் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் அதிகரித்துக் கொண்டே வருவதால் தற்போது சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்களது வீட்டிலேயே தங்களின் நேரத்தை செலவழித்து வருகின்றனர். ஆனால் மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் மருத்துவமனையிலேயே தங்கி கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக இரவு பகல் பாராமல் மகளுக்காக பணியாற்றி வருகின்றனர்.

இதன் காரணமாக மருத்துவர்கள் முக கவசம் மற்றும் கை கிளவுஸ்களை வேலை நேரம் முழுவதும் தொடர்ந்து அணிந்து கொள்வதால் அவர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.அதை உணர்த்தும் வகையில் பிரபல மருத்துவர் முகம்மது ஹக்கீம் என்பவர் ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் டாக்டர் ஒருவர் தொடர்ந்து பத்து மணி நேரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த பிறகு அவர்களின் டூட்டி முடிந்த பிறகு கை கிளவுஸ்களை கழட்டியபோது அவர்கள் கை எவ்வாறு உள்ளது என்ற புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். நெஞ்சை உலுக்கும் அந்த புகைப்படத்தை காணும்போது மருத்துவர்கள் மக்களுக்காக எவ்வாறு தங்களை வருத்திக் கொண்டு மக்களுக்காக சேவை செய்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.