விஜயின் மாஸ்டர் ஹீரோயின் புகைப்படம் லீக்..! அதிர்ச்சியில் படக்குழு..! ஏன் தெரியுமா?

பிரபல உச்ச நடிகருடன் கதாநாயகியாக நடிக்கும் நடிகையின் போஸ்டர் லீக்காகியுள்ள சம்பவமானது படக்குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


கோலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் விஜய். சமீபத்தில் பல்வேறு காரணங்களுக்காக இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் வரிஏய்ப்பு சோதனையில் ஈடுபட்டனர். எனினும் இவருக்கு சொந்தமான இடங்களிலிருந்து பணம் மற்றும் பிற சொத்துக்கள் கைப்பற்றப்படவில்லை என்று வருமான வரித்துறையினர் அறிக்கை வெளியிட்டனர்.

அப்போது விஜய் தன்னுடைய  "மாஸ்டர்" படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படமானது ஏப்ரல் 9-ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மாளவிகா மோகனன் மற்றும் ஆண்ட்ரியாவின் போஸ்டர்கள் இதுவரை படக்குழுவினர் வெளியிடவில்லை. இருப்பினும் நேற்று திடீரென்று சமூகவலைத்தளங்களில் மாளவிகா மோகனனின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதனை பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படத்தில் மாளவிகா தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து கல்லூரிக்கு செல்வது போன்று தெரிகிறது.

இந்த புகைப்படமானது தற்போது கோலிவுட் திரையுலகில் வைரலாகி வருகிறது.