மன்னரின் 4வது மனைவிக்கு சட்டப்படி அங்கீகாரம்..! தாய்லாந்து பரபரப்பு

தாய்லாந்து அரசரின் 4-வது மனைவியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


தாய்லாந்து மன்னரின் பெயர் மகா வஜ்ரலாங்கோர். இவருடைய வயது 66. இவருடைய தந்தையின் பெயர் பூமிபோல் அதுல்யாடெஜ். வயது மூப்பின் காரணமாக பூமிபோல் இறந்த பிறகு மகா வஜ்ரலாங்கோர் மன்னராக பதவியேற்றார். 

பதவியேற்ற சில மாதங்களிலேயே தன்னுடைய மெய்க்காப்பாளரான சுதீடா டிட்ஜெய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மன்னருக்கு இவர் 4-வது மனைவியாவார். சென்ற ஜூலை மாதம் இவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது 36 வயதான சினீனத் என்ற ராணுவ செவிலியருக்கு "சாவ் குன் ஃப்ரா" என்ற பட்டத்தை வழங்கினார். அதன்மூலம் அரச குடும்பத்தின் உயரிய அந்தஸ்தையும் சினீனத் பெற்றார்.

சமீபத்தில் மன்னரின் உத்தரவு படி, சினீனத்தின் புகைப்படங்கள் அரசு வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. அவருடைய வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் கிட்டத்தட்ட 60 புகைப்படங்களை தாய்லாந்து அரசு வெளியிட்டது.

அவர் கல்லூரியில் படித்தது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் பயிற்சி பெற்றது, மன்னரின் மெய்க்காவலராக பணியாற்றியது, தனியாக விமானத்தை இயக்குவது, மன்னருடன் இருப்பது, ராணுவத்தை இயக்குவது முதலிய பல்வேறு அரிய புகைப்படங்கள் அரசு வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.

இந்த சம்பவமானது தாய்லாந்து நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.