பெட்ரோல் மற்றும் டீசல் விலை சரியும் நேரத்தில் கலால் வரியை உயர்த்திய மத்திய அரசு..! நுகர்வோர்கள் அதிருப்தி..!

விலை சரியும் நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூபாய் மூன்று அதிகரிக்கப்பட்டுள்ளது நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வந்தது. இதனால் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசலின் விலை கணிசமாக குறைந்து நுகர்வோரின் நெஞ்சங்களில் பாலை வார்த்து வந்தது. இந்நிலையில் நுகர்வோர்களின் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது பெட்ரோல் டீசல் மீது வசூலிக்கப்படும் கலால் வரி லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைவை நுகர்வோர்கள் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது கச்சா எண்ணெயின் விலை சரிவின் மூலம் கிடைக்கப்படும் பயன்களை மத்திய அரசு கலால் வரி உயர்த்தி திரும்பப் பெற்றுள்ளது என தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

இது நாடெங்கிலும் நுகர்வோர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தற்போது மீண்டும் உயரக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.