முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு

சமீபத்தில் பயணத்தின் இடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வேலை கொடுத்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதே போன்றொரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.


கடந்த 18ம் தேதி அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசுவிழாவில் கலந்துகொள்வதற்காகச் சென்றார். நாமக்கல் மாவட்டம், கொமாரபாளையத்தில் முதல்வரின் காரைக் கண்டதும், மாற்றுத்திறனாளியான ப.சாதிக்பாஷா என்பவர் முதல்வரை வணங்கினார்.

உடனே காரை நிறுத்தி அவரிடம் விசாரித்தார் முதல்வர். அப்போது வேலை இன்றி சிரம்ப்படுவதாகவும், ஏதேனும் பணி ஒதுக்கிக்கொடுக்குமாறு கோரிக்கை மனு கொடுத்தார்.

அந்த மனுவை கருணையுடன் கவனித்த தமிழக முதல்வர், பாஷாவுக்கு பணி வழங்குமாறு உத்தரவு போட்டார். அதன்படி, 20ம் தேதியன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சர் பி.தங்கமணி பாஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, பாஷாவுக்கு கொமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் பணி நியமன ஆணையை வழங்கினார். 

இதையடுத்து பாஷாவின் உறவினர்கள் மட்டுமின்றி அக்கம்பக்கத்து மக்களும், உறவுகளும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர். இப்படியொரு எளிமையான முதல்வரை கண்டதே இல்லை என்று மக்களும் வியந்து பாராட்டுகின்றனர்.