இனிமே தமிழர்கள் திருப்பதிக்குப் போகவேண்டாம்! சென்னையிலே வருகிறது பிரமாண்ட வெங்கடாஜலபதி திருத்தலம்!

ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்ற இந்திய நாட்டில் தினந்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபடுகின்ற ஒரு அற்புதக் கோயிலாக திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் இருக்கிறது.


திருப்பதி திருமலை கோயிலுக்கு நெடுந்தொலைவில் இருந்து வந்து வழிபட்டு செல்பவர்கள் ஏராளம். அத்தகைய பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்கிறது திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம். அதன் ஒரு பாகமாக ஒவ்வொரு முக்கியமான நகரங்களிலும் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டும் பணி செய்து வருகிறது.

தமிழகத்தில் இருந்து பக்தர்கள் அதிகமாக திருப்பதிக்கு வருகை தருவதால், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பிரம்மாண்ட ஏழுமலையான் கோவில் கட்டும் திட்டம் குறித்து திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழகத்தில் இருந்து பெரும்பாலான மக்கள் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசித்து விட்டு செல்கின்றனர். இதனால், சென்னையில் மிகப்பெரிய ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ள்ளதாகவும். இது குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கலந்து ஆலோசிக்க உள்ளோம். விரைவில் சென்னையில் கோவில் கட்டும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்குவோம் என தெரிவித்தார்.

மேலும் இத்தனை ஆண்டுகாலம் இருந்த வி.ஐ.பி தரிசன முறை தற்போது நீக்கப்பட்டு அனைத்து பக்தர்களும் ஒன்றாக தரிசனம் செய்யும் முறையை பின்பற்றபடுவதாகவும், தற்போது ஒரு மணி நேரத்திற்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையிலான பக்தர்கள் ஏழுமலையான் தரிசனம் செய்து செல்வதாகவும், கோயிலின் அனைத்து விடயங்களிலும் பக்தர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படுவதாக கூறினார்.

ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் தமிழக மற்றும் கேரள மாநில மக்கள் சுலபமாக வழிபாடு செய்வதற்கு வசதியாக கட்டப்பட்டிருப்பதாகவும், அதே போன்று ஒரு கோயிலையே தற்போது சென்னையில் தமிழக அரசு நிலம் ஒதுக்கிய பின், ஆந்திரப் பிரதேச முதல்வருடன் திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் கலந்தாலோசித்து கூடிய விரைவில் திருப்பதி பெருமாள் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனவும் கூறினார்.

இதற்கான இடம் குறித்த விவரங்களை தேவைப்பட்டால் ஆந்திர முதல்வர், தமிழக முதல்வரிடத்தில் பேசுவார் என திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டிதெரிவித்தார். திருப்பதி தேவஸ்தான தலைவர் வெளியிட்ட அறிவிப்பு குறித்து பதிலளித்த, சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மைய தலைவர் கிருஷ்ணா ராவ், சென்னையில் பெரிய இடம் கிடைப்பது மிக கடினமான ஒன்று.

சில வருடங்களுக்கு முன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏழுமலையானுக்கு பெரிய கோவில் கட்ட இடம் அளிப்பதாக உறுதியளித்தார். எதிர்பாராதவிதமாக அவர் மறைந்ததால் இந்த கோவில் கட்டும் விடயத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. எனினும் தற்போதைய ஆந்திர முதல்வர்,

தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சென்னையில் திருப்பதி திருமலை கோவில் கட்டுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறினார். மீண்டும் நாங்கள் இடத்திற்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.