என் கணவன் என் மகளையும் உறவுக்கு அழைக்கிறார்..! போலீசிடம் கதறிய மனைவி! பொள்ளாச்சி அதிர்ச்சி!

பொள்ளாச்சியில் தாயுடன் கள்ள உறவில் இருந்து வந்த நபர் ஒருவர், அவரது மகளிடமும் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நாச்சிமுத்து கவுண்டர் வீதி அமைந்துள்ளது. இங்கு முத்துக்குமார் (வயது 38) என்பவர் வசித்துவருகிறார். இவர் வசிக்கும் அதே பகுதியில் பெண் ஒருவர் தன் கணவனை இழந்து இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். கணவரை இழந்த அந்த பெண் மூத்த மகளை திருமணம் செய்து வைத்து இருக்கிறார். அவரது இரண்டாவது மகள் அருகில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் கணவரை இழந்து தனிமையில் தவித்து வந்த அந்த பெண், முத்துக்குமார் உடன் நெருங்கி பழக ஆரம்பித்தார். நாளடைவில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளனர். இன்னிலையில் முத்துக்குமார் கள்ளக்காதலியின் இரண்டாவது மகளிடம் தன்னுடைய சில்மிஷ வேலையை காட்டியிருக்கிறார்.

இந்த சம்பவத்தை பற்றி அறிந்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முத்துக்குமார் பற்றி புகார் அளித்திருக்கிறார். அதாவது தன்னுடைய இரண்டாவது மகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்தமையால் அவர் மீது அந்தப் பெண் புகார் அளித்திருக்கிறார். இதனை அறிந்த போலீசார் முத்துக்குமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.