பெரியார், எம்.ஜி.ஆருக்குப் பிறகு அண்ணா சிலைக்கும் காவி அவமானம்..!

பெரியார் சிலையில் காவி வண்ணம் பூசினார்கள், பின்னர் எம்.ஜி.ஆர். கையில் காவி கொடியைக் கொடுத்தார்கள். இவற்றை அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் கடுமையாக எதிர்த்து நின்றன.


இந்த நிலையில் இன்று கன்னியாகுமரி, குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். அத்துடன் சிலையின் மீது குப்பைகளையும் வீசி இருக்கிறார்கள்.

இதுகுறித்து இன்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டரில், ‘தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்துக்கும் கீழே போகும் அவர்களின் எண்ணம. தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள்.

இத்தகைய குற்றவாளிகளைக் கைது செய்க என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார். புதிய கல்விக்கொள்கை, சுற்றுசூழல் திருத்த வரைவு போன்ற பிரச்னைகளை மறைப்பதற்கு இதுபோன்ற செயல்கள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.