ஊரடங்கை மீறி மசூதியில் தொழுகை! கலைந்து போகச் சொன்ன போலீஸ் மீது செருப்பு வீச்சு! தடியடி! தென்காசி பதற்றம்!

தென்காசி நடுபேட்டை பள்ளிவாசலில் ஊரடங்கு உத்தரவை மீறி மசூதியில் தொழுகை நடைபெற்றதை அடுத்து போலீசார் அங்கு கூட்டத்தை கலைந்து போகும்படி கூறும்பொழுது அங்கு சற்று நேரம் பதற்றம் நிலவியது.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றி லிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் இந்த வைரஸ் தொற்று சமூக பரவலாக மாறாமல் தடுக்க இயலும் என இந்த முடிவை மத்திய அரசாங்கம் விடுத்துள்ளது. இதற்கான முக்கியக் காரணமே பொதுமக்களை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்துவது தான் என்று அரசாங்கம் நம்மிடம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் கோவில்களில் பொதுமக்கள் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஆகையால் கோவில்கள் மற்றும் மசுதிகள் ஆகிய இடங்களிலும் தொழுகைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் தொழுகை செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் ஊரடங்கு உத்தரவும் முடியும் வரை அவரவர் தங்களது வீடுகளிலேயே செய்து கொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இன்னிலையில் தென்காசி நடு பேட்டையில் உள்ள ஜமாத்தில் இன்றைய தினம் தொழுகை நடைபெற்று உள்ளது. இந்தத் தொழுகையில் பங்கேற்பதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றாக ஒரே இடத்தில் கூறியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்ளனர்.

டிஎஸ்பி கோபால கிருஷ்ணன் தலைமையிலான இந்த குழு, ஜமாத் நிர்வாகிகளிடம் பேசி உடனடியாக இந்த கூட்டத்தை கலைக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் போலீசாரின் வார்த்தையை ஏற்காமல் அங்கிருந்தவர்கள் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் போலீசார் மீண்டும் அங்கிருந்து மக்களைக் கலைந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போலீசாரின் வார்த்தைக்கு செவி சாய்க்காத அங்கிருந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனையடுத்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக ஜமாத்தில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நீடித்தது. 

போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி வெளியேற்ற ஆரம்பித்தனர். உடனே ஜமாத்தில் தொழுகைக்காக வந்தவர்கள் போலீசாரின் மீது கற்களை வீசியும் செருப்புகளை வீசி தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் போலீசாருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.