மீண்டும் பொள்ளாச்சி! பள்ளி மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்! பதற வைக்கும் நிகழ்வு!

பொள்ளாச்சி அருகே பள்ளி செல்லும் மாணவிகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தங்களை காதலிக்கும்படி கூறியும் அப்பெண்களை கையை பிடித்து இழுப்பதும், கட்டிப்பிடிப்பதும் ,போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் புகார் அளித்தனர். மாணவிகளின் பெற்றோர்கள் அவர்களிடம் வந்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் .இந்நிலையில் அப்பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்திற்கு சென்று அவர்கள் மீது புகார் அளித்துள்ளனர். 

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முகமது சபீர் மற்றும் அவனது நண்பர்கள் வசந்தகுமார், முகமது அர்ஷத், கமர்தீன், முகமது ரியாஸ்  ஆகியோர் கைது செய்யப்பட்டு  காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து செல்போனை கைப்பற்றிய போலீசார் அதில் உள்ள ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழித்துவிட்டனர்.

இதையடுத்து பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 5 குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் முகம்மது சபீர் என்பவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.