எல்லாம் என் வீட்டு மாடித் தோட்டத்துல பழுத்தது..! 55 வயதிலும் காண்போரை பொறாமை பட வைக்கும் சீதா!

தனக்கு தேவையான அன்றாட பொருட்கள் அனைத்தும் வீட்டிலேயே கிடைப்பதாக பிரபல நடிகை கூறியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


1980,1990-களில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சீதா. இவர் நடித்த பல திரைப்படங்கள் பிரம்மாண்ட வெற்றி அடைந்துள்ளன. அதன் பின்னர் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். இந்த ஊரடங்கு காலத்தில் தன்னுடைய 

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் காலத்தில் வாழ்க்கையை எவ்வாறு நடத்துகிறேன் என்று அவர் கூறியிருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தற்போது அவர் மாடி தோட்டம் அமைத்து அதன்மூலம் கிடைக்கின்ற காய்கறிகளை இந்த இக்கட்டான சூழ்நிலையில் பயன்படுத்தி வருகிறார்.

"மாடித்தோட்டம் அமைக்க தொடங்கியபோது சென்னையின் சீதோஷண நிலையில் இது அவ்வளவாக சரிப்பட்டு வராது என்று என்னுடைய தோழிகளும் உறவினர்களும் கூறினர். ஆனால் நான் அவற்றை கண்டு கலங்கவில்லை. மேலும் நன்றாக வந்தால் சந்தோஷம். இல்லையெனில் நல்ல அனுபவமாக இருக்கும் என்று கருதுகிறேன் என்று தொடங்கினேன்.

தொடக்க காலத்தில் சிறு குழந்தை போன்று இந்த தோட்டத்தை பராமரித்து வந்தேன். தற்போதும் அதனை அவ்வகையிலேயே செய்வதனால் எனக்கு நல்ல மகசூல் கிடைக்கிறது. இந்த ஊரடங்கு காலத்தில் நான் வெளியே சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை இல்லை.

காய்கறிகள் அரிசி மற்றும் தானியங்கள் ஆகியன 6 மாதங்களுக்கு தேவையான அளவில் உள்ளது. இப்போது என்னுடைய உறவினர்கள் அனைவரும் நாங்களும் மாடித்தோட்டம் வைத்திருக்கலாம் என்று எண்ணுகின்றனர்.

பஞ்சக்கவ்யா, சாணம், வேப்பெண்ணெய் கரைசல், கிச்சன் கழிவுகள் ராஜேஷ் இயற்கை பொருட்களை மட்டுமே உரங்களாக பயன்படுத்துகிறேன். தினமும் இந்த தோட்டத்திலேயே நேரம் செலவழிப்பதால், உற்சாகமாக உணர்கிறேன்.

இந்த கொரோனா காலத்தில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் சமம் என்பதை இயற்கை உணர்த்தியுள்ளது. இனியாவது இயற்கைக்கு மாறாக எதையும் செய்யாமல், இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்தால் மட்டுமே நன்மை ஏற்படும் என்பதை உலக மக்கள் உணர வேண்டும் என்று உளமார கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறி தன்னுடைய பேட்டியை நிறைவு செய்தார்.

இந்த பெட்டியானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.