கொரோனா பரிசோதனைக்கு சென்ற மருத்துவ குழுவின் சட்டையை கிழித்து அராஜகம்..! தூத்துக்குடியில் தப்லீக் கும்பல் வெறியாட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற மருத்துவ குழுவினரின் சட்டையைக் கிழித்து செல்போனை உடைத்து அங்கிருந்த மக்கள் அராஜகம் செய்ததால் சற்று நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.


தூத்துக்குடி மாவட்டத்தில் அய்யனாரூத்து கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் டெல்லியில் நடைபெற்ற தப்ளிக் மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறார். அந்த மாநாட்டில் பங்கேற்ற அவருக்கு அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட கையோடு அந்தப் பகுதி தாசில்தார் பாஸ்கரன் காவல்துறையினரின் உதவியோடு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். மேலும் அந்த ஊருக்கு பலத்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. 

இதனை அடுத்து மாநாட்டில் பங்கேற்ற அந்த நபரின் மகன் , மருமகள் மற்றும் அவரது வீட்டில் இருந்த அனைவரையும் மருத்துவர்கள் அழைத்து கொரோனா பரிசோதனைக்காக ஆம்புலன்சில் ஏற்றினர். இது பற்றிய தகவல் அறிந்த ஊர் மக்கள் ஆம்புலன்சில் அவர்களை அழைத்து செல்ல கூடாது என வழி மறித்து போராட்டம் செய்துள்ளனர். இதனை தடுக்க வந்த சுகாதார அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் இடத்தில் வாக்குவாதம் செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது வெள்ளன் கோட்டை சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் காளிராஜ் என்பவரை ஊர் மக்கள் அடித்து உதைத்து அவரது செல்போனையும் அவரது இரு சக்கர வாகனத்தையும் அடித்து உடைத்துள்ளனர். இதனால் அந்த இடத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து தாசில்தார் பாஸ்கரன் ஊர் பொதுமக்களிடம் பேசி அவர்களுடைய ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டார் பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகாரியை ஊர்மக்கள் தாக்கியதால் அங்கு அதிகாரிகள் அனைவரும் இணைந்து போராட்டம் நடத்தினர். 

காவல்துறை அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் கூறினர். காவல் துறை சார்பாக நிச்சயம் இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட பின்பு அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.