சிறைக்கைதிகள் செய்து வெளியிட்ட இனிப்பு காரவகைகள்! தீபாவளி ஸ்பெஷல் ..

மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் குறைந்த விலையில் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன.


தீபாவளி என்றாலே இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு என்றுமே பஞ்சம் கிடையாது. இனிப்பு மற்றும் கார வகைகளை சிறைக்கைதிகள் தங்களுடைய கைகளால் உற்பத்தி செய்து அதனை சந்தைக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனைப்பற்றி சிறைத்துறை துணை அதிகாரி சண்முகம் சுந்தரம் அவர்களை தொடர்பு கொண்டு பேசியபோது பல அரிய தகவல்களை கூறியிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் சிறை கைதிகளால் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வது வழக்கமாகும் . 

அந்த வகையில் கடந்த ஆண்டு 1.50 லட்சத்திற்கு இனிப்பு கார வகைகள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டு வரப்போகும் தீபாவளி பண்டிகையில் எங்களுடைய இலக்கு இரண்டு லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காரம் கிலோ ₹ 180, இனிப்பு கிலோ ₹200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  இனிப்பு கார வகைகளை தயார் செய்வதற்கு அளிக்கப்பட்ட பயிற்சியை போல மற்றும் சில தொழில்முனைவு பயிற்சிகளையும் வழங்க இருப்பதாகவும் போலீஸ் அதிகாரி சண்முகசுந்தரம் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.