உன்னால் கொரோனா பரவும்..! பக்கத்து வீட்டு தம்பதியால் பெண் டாக்டருக்கு நேர்ந்த கொடுமை! அதிர்ச்சி ரிப்போர்ட்!

குஜராத் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரை கொரோனா தொற்று பரப்பி விடுவார் என நினைத்து பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் அவரிடம் சண்டையிட்டு அவரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


குஜராத் மாநிலத்தில் அமைந்திருக்கும் சூரத்தில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் சஞ்சீவனி என்ற பெண், மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் பணியாற்றி வரும் அந்த மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இவர் பணியாற்றி வரும் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதால் பெண் மருத்துவர் சஞ்சீவனி எங்கு நோய்த் தொற்றை தங்களுக்கும் பரப்பி விடுவாரோ என அஞ்சி அவரது வீட்டின் அருகில் இருக்கும் அக்கம்பக்கத்தினர் அனைவரும் அவரிடம் சண்டையிட்டு உள்ளனர். இதனையடுத்து பெண் மருத்துவர் சஞ்சீவனி தான் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வருவதாகவும் ஆனால் கொரோனா நோய் தொற்று உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வரும் வார்டில் தான் பணியாற்றவில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.

இருப்பினும் பெண் மருத்துவர் சொல்லும் எதையுமே காதில் வாங்காத அருகிலிருந்தவர்கள் தொடர்ந்து சண்டையிட்டு உள்ளனர். இப்படியாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெண் ஒருவர் தன் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது வீட்டு வாயிலில் சில பேர் நின்று கொண்டு நீங்கள் இனிமேல் மருத்துவமனைக்கு செல்ல கூடாது எனவும் ஒருவேளை அப்படி சென்றால் இனிமேல் இந்த வீட்டிற்கு வரக் கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். 

இதனையடுத்து பெண் மருத்துவர் சஞ்சீவனி உடனடியாக பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு இதுகுறித்த ட்வீட் செய்திருக்கிறார். இதனைப் பற்றிய தகவல் அறிந்த பாஜக எம்எல்ஏக்கள் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சனையை சரிசெய்து இருக்கின்றனர். இருப்பினும் பெண் மருத்துவரிடம் அக்கம்பக்கத்தினர் சண்டை போடுவதை நிறுத்தவில்லை.

கடந்த 4ஆம் தேதி அன்று பெண் மருத்துவரை அவரது வீட்டு மாடிக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு சென்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி அனைவரும் வதந்தியை கிளப்பினர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் மருத்துவர் அங்கு நடந்த எல்லா சம்பவத்தையும் தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

பின்னர் மருத்துவர் சஞ்சீவனி தன் செல்போனில் பதிவு செய்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். பதிவேற்றம் செய்த சில மணி நேரத்திலேயே அந்த வீடியோ வைரலானது. இதனைத்தொடர்ந்து இந்த பெண் மருத்துவரின் வீட்டின் அருகில் இருக்கும் மற்றொரு தம்பதியினர் இவரிடம் தேவை இல்லாமல் நாயை வைத்து வம்பு செய்துள்ளனர்.

அப்படியே அந்தப் பெண்ணின் கணவர் பெண் மருத்துவரை பார்த்து கண்டபடி மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி சாடி இருக்கிறார். பின்னர் அது பெண் மருத்துவர் எனக்கும் நான்கு வயதில் மகன் இருக்கிறான் எனவும் ஆகையால் நான் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறேன் எனவும் கூறியிருக்கிறார். இருப்பினும் எதையுமே காதில் வாங்காத அவர்கள் மீண்டும் மீண்டும் அந்தப் பெண் மருத்துவரை வம்பு இழுத்து சண்டையிட்டு உள்ளனர்.

அது மட்டுமில்லாமல் அந்தப் பெண்ணின் கணவர் பெண் மருத்துவரை பார்த்து , இனிமேற்பட்டும் நீ மருத்துவராக பணி புரிந்தால் உன்னை அடித்தே இந்த வீட்டை விட்டு துரத்தி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். ஒரு கட்டத்தில் கணவன் மனைவி இருவரும் இணைந்து பெண் மருத்துவர் சஞ்சீவினியை சரமாரியாக தாக்க முற்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் மருத்துவர் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். 

வீடியோ பதிவு வெளியான சில மணி நேரத்திலேயே அங்கு மிகப் பெரிய சலசலப்பு உருவானது. வீடியோ வைரலாக பரவ ஆரம்பித்தவுடன் இந்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் பெண் மருத்துவரை தாக்கிய தம்பதியினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து பெண் மருத்துவர் பேசும்பொழுது, நான் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன் ஆனால் ஒரு வார்டில் நான் பணியாற்ற வில்லை. பின் தேவையான எல்லா விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன். எனக்கும் நான்கு வயதில் வீட்டில் ஒரு மகன் இருக்கிறான்.

ஆகையால் நான் மிகுந்த கவனத்துடன் தான் செயல்படுகிறேன். அதுமட்டுமில்லாமல் ஒருவேளை எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனையிலேயே நான் தங்கி விடுவேன். முடிந்தவரை அங்கேயே நான் என்னைத் தனிமைப் படுத்திக் கொள்வேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கு இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.