கொரோனாவை விட எதிர்காலம் மக்களுக்கு அச்சம் தருகிறது; தமிழக அரசு ஒரு நல்ல நடவடிக்கையை எடுக்க வேண்டும் - விஜயசேதுபதி

கொரோனா காரணத்தால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கிறார்கள். ஆனால், கொரோனாவை விட எதிர்காலம் மக்களுக்கு அச்சம் தருகிறது. அதனால், உடனே சரியான நடவடிக்கையை அரசு எடுக்கவேண்டும் என்று காட்டமாக அறிக்கை வெளீயிட்டுள்ளார் நடிகர் விஜய சேதுபதி.


நான் மிடில் கிளாஸ் குடும்பமாக இருக்கும் போது என்ன சம்பளம் வாங்கினாலும், 20-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரை குடும்பம் நடத்துவது கஷ்டமாக இருக்கும். பணம் கடன் வாங்கியவர்கள், வங்கி லோன், வீட்டு வாடகை, குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் இதெல்லாம் மாறப் போவதில்லை. என்ன சொன்னாலும் மாறப் போவதில்லை.

மிடில் க்ளாஸ் குடும்பத்தினர் வேலைக்குப் போவது ரொம்ப முக்கியம் என்று எதிர்பார்க்கிறேன். பாதுகாப்பு முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எப்போது நிலைமை சீராகி வேலைக்குச் செல்வோம் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் வேலைக்குச் செல்ல வேண்டும். எனக்குமே பெரிய கஷ்டமாக இருக்கிறது. நிறையப் பேருக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கிறார்கள். அனைத்துமே சரி தான், ஆனால் இதற்கும் ஒரு தீர்வு வேண்டும்.

பொதுமக்களுக்கு என் வேண்டுகோள். முடிந்தளவுக்கு மனதையும், உடம்பையும் சோர்வில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தமிழக அரசுக்கும் ஒரு வேண்டுகோள். ரொம்ப முடியவில்லை, சீக்கிரம் வேலைக்குப் போக வேண்டும். நீங்கள் பாதுகாப்பு சார்ந்து எடுத்த அத்தனை முடிவுகளுக்கு எனது நன்றியும், வணக்கங்களும். நிறையப் பேரால் வாடகை உள்ளிட்ட விஷயங்களால் தாங்க முடியவில்லை. எனக்குத் தெரிந்த 2 பேரிடம் மாதக் கடன் தொகை கட்டவில்லை என்று ஆட்டோவை எல்லாம் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆகையால் தயவு செய்து சீக்கிரம் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.