நூதனமான முறையில் மக்கள் நேர்த்திக்கடன் செலுத்திய சம்பவமானது ராமநாதபுரம் மாவட்டத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாக்கு மூட்டைக்குள் மனிதர்கள்! கமுதியில் நூதனம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி எனும் இடம் அமைந்துள்ளது. கமுதி அருகே மிகவும் பிரம்மாண்டமான கோவில் ஒன்று அமைந்துள்ளது. செங்கப்படை கிராமத்திலுள்ள "அழகு வள்ளியம்மன் கோயில்" என்ற கோவிலில் சென்ற வாரம் முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. காப்புக்கட்டுதலுடன் தொடங்கப்பட்ட இந்த திருவிழா விழவானது, புதன்கிழமை அன்று வினோதமான நேர்த்திக்கடன் மூலம் நிறைவடைந்தது.
அந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொள்ளும் மக்கள், வேண்டுதல் நிறைவேறிய பிறகு உடல் முழுவதும் சாக்குப்பைகளில் நுழைத்து இறைவனை நினைத்து நடனமாடுவர். இந்தவித நேர்த்திக்கடனானது அந்தப்பகுதியில் மிகவும் பிரபலமானது.
மேள தாளங்களுடன் மக்கள் நடனமாடுவதை காண்பதற்கு வியப்பாக இருக்கும். இந்த வினோதமான நேர்த்திக்கடன் மூலம் பல வகையான நோய் நொடிகள் முற்றிலும் நீங்குவதாக சுற்றுவட்டாரத்தில் வாழ்ந்து வரும் பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் செயல்படுகின்றனர்.
இந்த நேர்த்திக்கடனானது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.