குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகளை போன்று உடனடியாக தண்டனை அளிக்கப்பட வேண்டுமென்று நடிகை திரிஷா குரல் உயர்த்தியுள்ளார்.
காமக்கொடூரர்கள்! கல்லூரி விழாவில் நடிகை திரிஷா டென்சன்!

ஐ.நா சபையில் குழந்தைகள் நலனுக்காக யுனிசெஃப் என்ற அமைப்புள்ளது. இந்த அமைப்பின் தூதராக பாலிவுட் நட்சத்திர நடிகை திரிஷா செயல்பட்டு வருகிறார். நேற்று இவர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை கண்டித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், "கடந்த இரு வருடங்களில் போஸ்கோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் அக்குழந்தைகளுக்கு நன்கு பரிச்சயமானவர்களாகவே உள்ளனர். இதுபோன்ற குற்றங்களில் இதுவரை நாம் அமைதி காத்தது போதும்.
இனிமேலாவது நாம் நம் குரலை உயர்த்துவோம். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வலிமையாக எதிர்ப்போம். அரபு நாடுகளில் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக தண்டனைகளை வழங்குவதற்கு வழிவகுப்போம். நாங்கள் சினிமாவில் நடித்து வருகிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
எங்கள் கதாபாத்திரங்கள், எங்கள் நிஜ வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவை. அவற்றை பின்பற்ற வேண்டாம்" என்று கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது பல நூற்றுக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.
ஒரு சில அரபு நாடுகளில் கற்பழிப்பு குற்றம் செய்பவர்களுக்கு ஆண்மை நீக்கப்படுகிறது. அந்த வகையில் திரிஷாவும் அப்படி ஒரு தண்டனையை தான் இந்தியாவில் கொடுக்கச் சொல்கிறார் போல.