இனி தனியார் ஊழியர்களும் ரூ5000/- வரை ஓய்வூதியம் பெறலாம்!!!

மத்திய அரசானது தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.


இத்திட்டத்தில் சேருபவர்கள் ரூ1000 முதல் ரூ5000 வரை ஓய்வூதியமாக  பெற்று  பயன் பெறலாம். இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் சேர இயலும்.

இத்திட்டத்தின் சிறப்பம்சங்களை இனி நாம் காண்போம். உதாரணத்திற்கு  இத்திட்டத்தில் ஒருவர் தனது 20 வயதில் சேருகிறார் என்று எடுத்து கொள்வோம்.

அவர் 20 வயது முதல் 60 வயது வரை மாதந்தோறும் ரூ248 தவணையாக செலுத்த வேண்டும். அவருக்கு 60வயது முடிந்தவுடன் ரூ5000 மாதம்தோறும் அவர் ஓய்வூதியமாக அவரின்  ஆயட்காலம் முடியும் வரை பெறுவார்.

அடல் பென்ஷன் யோஜனா என்றழைக்கப்படும் இந்த திட்டம் மத்திய அரசால் 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை இந்த திட்டத்தில் இந்தியா முழுவதும் 1.24 கோடி மக்கள் சேர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவணை தொகையானது வயதிற்கேற்ப வேறுபடும். அந்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.