சிவராத்திரியன்று (21.2.2020) பழநியில், பழநி - சுவிட்சர்லாந்து செல்வத் திருவிழா. காணத் தவறாதீர்கள்!

வேண்டியவருக்கு வேண்டிய வரம் தரும் வள்ளல் முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளியிருக்கும் திருத்தலம் பழநியம்பதி.


இங்கு வந்து வேண்டினால் செல்வ வளம் கிட்டும் என்பது நம்பிக்கை. இதனால் இங்கு சிவராத்திரி நன்னாளில் உலக செல்வ வளத்தை மேன்மை அடையச் செய்யவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்படையவும், செல்வத் திருவிழா நடைபெறவுள்ளது.

LMRK என்ற ஆன்மீக அமைப்பு உலக வளத்துக்காக சுவிட்சர்லாந்தில் முருகப்பெருமான் மற்றும் ஆஞ்சநேயரின் திருவுருவச் சிலைகளை பிரதிஷ்டை செய்ய உள்ளார்கள். பழநி – சுவிட்சர்லாந்து செல்வத் திருவிழாவில் புதியதாக நிறுவப்படவுள்ள முருகப்பெருமானுக்கும், ஆஞ்சநேயருக்கும் மகா சிவராத்திரு புண்ணிய தினத்தன்று (21.2.2020) ஆஞ்சநேயர் மலையில் காலை 7:00 – 8:00 மணிக்கும், ஐவர் மலையில் பகல் 10:00 – 12:00 மணிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

இதைத் தொடர்ந்து பழநி மலையைச் சுற்றி கிரிவலம் மாலை 5:30 – 8:30 மணி வரை நடைபெற உள்ளது. கம்பீரமான யானை மற்றும் குதிரைகள் பூட்டிய அழகிய ரதத்தில் அலங்கரிக்கப்பட்ட மூர்த்திகளுடன் இந்த அற்புத ராஜ ஊர்வலம் நடைபெற உள்ளது. பக்தர்கள் உடன்வர பல இன்னிசை கருவிகளின் நாதங்கள் ஒலிக்க, காவடி ஆட்டமும் பக்தர்களின் ஆரவார கோஷங்களும் முழங்க இந்த கிரிவலம் அமைய உள்ளது.

இதன் பின்னர் இரு மூர்த்திகளின் பிரதிஷ்டை விழா சுவிட்சர்லாந்தில் 12.4.2020-ல் நடைபெறவுள்ளது. இதனால் உலகில் பல சாதகமான மாற்றங்களும், எதிர்காலத்தில் செல்வ செழிப்பும் உண்டாகும் என்பது நம்பிக்கை. திரளான பக்தர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு செழிப்பான உலகம் அமைய வேண்டிக்கொள்ளலாம்.