எதை வைத்து வெற்றிடம் என்று சொல்கிறீர்கள்! வளர்மதி அக்காவிடம் வசமாக சிக்கிய ரஜினி!

எதைவைத்து தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் நிலவுகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார் என்பது தனக்கு புரியவில்லை என்று பா.வளர்மதி கூறியுள்ளார்.


நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். நடிகர் ரஜினியின் இந்த கருத்தைக் கேட்ட பல்வேறு அதிமுக தரப்பினரும் நடிகர் ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அதிமுகவின் பா. வளர்மதி , தமிழகத்தில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது என்பதை எதை வைத்து ரஜினிகாந்த் கூறி இருக்கிறார் என்பது எனக்கு புரியவில்லை.

நடிகர் ரஜினிகாந்தின் கருத்தை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.ஆளுமை மற்றும் தலைமை பண்பு இருப்பதாலேயே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் ஆட்சியையும், கட்சியையும் வழி நடத்துகிறார்கள் எனவும் பா.வளர்மதி கூறியுள்ளார்.