பிரசவத்திற்கு வந்த நிறைமாத கர்ப்பிணி பெண்..! தனிமையில் வைத்து 2நாட்களாக கற்பழித்த டாக்டர்..! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணை மருத்துவர் கற்பழித்துள்ள சம்பவமானது பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,19,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 19,50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்தியா முழுவதிலும் 9,352 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 980 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 324 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

பீகார் மாநிலத்தில் இந்த நோய் தாக்குதல் அறிகுறிகளுடன்  பெண்ணொருவர் இந்த மாத தொடக்கத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. சிகிச்சை தொடங்கிய நாளிலிருந்தே, அந்த பெண்னிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

முதன்முதலில் இதுகுறித்து அந்த அறையின் காவலாளியிடம் பாதிக்கப்பட்ட பெண் கூறியபோது, "இந்த சம்பவத்தை வெளியில் கூறினால் குடும்ப மானம் சீரழிந்து விடும். ஆகையால் அமைதியாக இரு" என்று கூறியுள்ளார். இளம்பெண் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 நாட்களில் பலமுறை மருத்துவரால் கற்பழிக்கப்பட்டார். இந்த மாதம் 3-ஆம் தேதியன்று, இளம்பெண்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்ற பரிசோதனை முடிவு வெளியானது.

உடனடியாக அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீட்டிற்கு சென்ற இளம்பெண்ணுக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. எவ்வளவோ முயற்சி செய்தும் துளிகூட ரத்தப்போக்கை கட்டுப்படுத்த இயலவில்லை. ஏற்கனவே அந்த பெண் 2 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், ரத்தப் போக்கினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும், அதன் பின்னர் கொரோனா வைரஸ் பரிசோதனையின்போது தான் பல்வேறு துயரங்களை சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் சம்பவம் குறித்து அந்த மருத்துவமனையின் உயரதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அந்த மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் தங்களுடைய குடும்பங்களை பற்றி கவலைப்படாமல் மனித உயிர்களை காப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் மருத்துவர்களை இது போன்ற சிலர் கொச்சைப்படுத்துவது மனிதநேயத்தை சந்தேகிக்க வைக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. இந்த சம்பவமானது பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.