ஓட்டுக்குப் பணம் வாங்குவது பற்றி,முத்துராமலிங்கத் தேவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

இந்தக் காலம் மட்டுமல்ல, காலம் காலமாகவே பணம் வாங்கி ஓட்டுப் போடுவது தமிழர்களின் ரத்தத்தில் ஊறிய கலாச்சாரம் என்பதை புரியவைக்கிறது இந்த செய்தி. இது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மதுரை தமுக்கம் திடலில் 1962ல் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்


பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். கடைசியாக பேசியது ஆகும். "ஓட்டு போடுகிற வகையில், மக்கள் எதையும் எதிர்பார்க்காதீர்கள், அது மகா பாவம். ஒரு கிராமத்தில் முளைப்பாரி என்றால் இரண்டு ரூபாய் எடுத்துப்போய் பார்க்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு என்றால் நான்கு ரூபாய் எடுத்துச் சென்று பார்க்கிறார்கள், சினிமாவுக்கு ஐந்து ரூபாய் செலவிட்டு பார்த்து வருகிறார்கள். ஆனால் தேர்தலில் ஓட்டு போடுவதற்கு மட்டும், யாராவது பணம் தருவாரா என்று எதிர்பார்க்கலாமா? உங்கள் தலைவிதியை ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்புவிக்கும் ஒரு கடமையல்லவா ஓட்டு போடுவது?

காசுக்காக காத்திருக்காமல் நாம் சொந்தமாக செலவிட்டு ஓட்டு போடுங்கள். அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம்."