ஏசி..! தனி செல்போன் சார்ஜர் என் ஏமாற்றிய ஆம்னி பஸ்! ரூ.5000 நஷ்ட ஈடு பெற்ற பயணி! எங்கு தெரியுமா?

விளம்பரத்தை நம்பி அரசு சொகுசு பேருந்தில் சென்று ஏமாந்த பயணிக்கு 5,000 ரூபாய் வழங்கப்படவுள்ள செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து கழகத்தின் கீழ் "ஷிவ்ஷாகி" என்ற பெயரை கொண்ட சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் ஏ.சி, மொபைல் சார்ஜிங் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளதாக விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதனை நம்பிய சதீஷ் ரத்தன்லால் என்ற பயணி ஜல்னா என்ற நகரிலிருந்து அவுரங்காபாத் நகருக்கு இந்த பேருந்தில் பயணம் செய்ய திட்டமிட்டார். அதன்படி டிக்கெட் வாங்கி அவர் பேருந்தில் பயணம் செய்தார்.

ஆனால் விளம்பரத்தில் கூறியவாறு அந்த பேருந்தில் எந்தவித வசதியும் செய்த தரப்படாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடும் கோபத்தில் இருந்த அவர் ஜல்னா மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் ரத்தன்லாலுக்கு 5,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவானது மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.