பேருந்துக்குள் கண்டக்டர் செய்த செயல்! தட்டிக் கேட்ட பயணிக்கு நேர்ந்த விபரீதம்! பதை பதைக்க வைக்கும் சம்பவம்!

பேருந்தில் பயணம் செய்ய வந்த பயணியை ஓட்டுநர்களும், நடத்துநர்களும் அடித்து வெளுத்து வாங்கும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இன்று காலை திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவர் பேருந்தில் ஏறினார். அப்போது அந்த பேருந்தின் நடத்துநர் பேருந்து உள்ளே நுழைந்து உடைமாற்றி கொண்டிருந்தார். இதனை கண்டித்த பயணி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினார்.

இதனால் ஆவேசமடைந்த நடத்துனர் பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை கவனித்த பணிமனையில் இருந்த பிற ஓட்டுநர்களும் நடத்துநர்களும் ஒன்றிணைந்தனர்.

நடத்துநர் வாக்குவாதத்தின் போது அந்த பயணியை அடிக்கின்றார். உடனடியாக அருகிலிருந்த பிற ஓட்டுநர்களும் அவரை அடிக்க தொடங்குகின்றனர். அந்த பயணி படுகாயமடைந்து நிலை தடுமாறி பேருந்தில் இருந்து வெளியே வந்து விழுகிறார். இந்த சம்பவத்தை பொதுமக்கள் அனைவரும் கண்டனர். ஆனால் ஒருவரும் தடுக்க முன்வரவில்லை.

வீடியோ மட்டுமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். பேருந்தை விட்டு வெளியில் விளைந்த பயணியை காலால் உதைத்து புரட்டி புரட்டி அடித்து காயப்படுத்தியுள்ளனர். 

சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவானது வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பொதுமக்கள் உரிய அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் குரலை எழுப்பியுள்ளனர். 

இந்த சம்பவமானது திண்டுக்கல் பேருந்து பணிமனையில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.