பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் தவறுதலா அவசர கால வழியைத் திறந்ததால் அந்த விமானம் 7 மணி நேரம் தாமதமாக புறப்பட நேர்ந்தது.
நடுவானில் 200 பேரின் உயிருடன் விளையாடிய இளம் பெண்! பாத்ரூம் போவதற்கு இவ்வளவு அக்கப்போரா?
பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டது. விமானம் 200 பேருடன் கிளம்பி ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு பயணி தான் செய்வது என்ன என்பதை அறியாமலே அவசரகால வழியைத் திறந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பதற்றமடைந்த விமானப் பணிப் பெண்கள் விமானியிடம் விவரத்தைக் கூற விமானம் நிறுத்தப்பட்டு திருப்பப்பட்டது. விமானத்தில் இருந்து பயணிகளையும், அவர்களின் பொருட்களையும் ஊழியர்கள் இறக்கிவிட்டனர்.
இந்நிலையில் பயணிகள் ஓட்டல்களில் தங்கவும், அவர்கள் ஓட்டலுக்கு செல்ல பயணவசதியும் அளிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அடுத்ததாக வாய்ப்புள்ள விமானங்கள் கிடைக்கும் வரை பயணிகள் காத்திருக்க நேர்ந்ததாக அவர் கூறினார்.
தான் செய்வதை அறியாமல் தவறு செய்ததால் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும் ஒரு விமானத்தின் அவசரகால வழி பயணிகள் எளிதில் கையாளும் வகையில் தான் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.