காகத்துக்கு சாதம் வைத்தால் பித்ரு தோஷம் நீங்குமா..? தோஷம் தீர்க்கும் வழிகள் இதோ!

ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பாக்கிய ஸ்தானத்தையும் கொண்டு இதை நாம் எளிதாக கண்டுபிடிக்கலாம்


தவிர இந்த இடங்களை பாவங்களில் கிரகங்களான ராகு கேது மற்றும் செவ்வாய் சனி உள்ளிட்ட கிரகங்கள் இருந்தாலும் அவர்களுக்கு பித்ரு தோஷம் உள்ளது எனலாம். இதில் இந்த ஸ்தானங்கள் மட்டும்தான் காரணமா என்றால் இல்லை, இந்த ஸ்தானங்களும் முக்கிய இடம் பெறுகின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த ஸ்தானங்களை மட்டுமே வைத்து இதை நாம் பார்க்கக் கூடாது. அதன் தொடர்புடைய கிரகங்கள் மற்றும் அதன் நிலையையும் நன்றாக ஆராய வேண்டும். தந்தை வழியைக் குறிக்கும் கிரக நிலை எப்படி உள்ளது மற்றும் தந்தையைக் குறிக்கும் கிரகம் எப்படி உள்ளது என்பதைப் பொருத்தும் அவர்களுக்கு பித்ரு சாபம் உள்ளதா என்பதை நம்மால் கண்டுபிடிக்க இயலும். 

நம் பித்ருக்கள் செய்த பாவத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் பித்ருக்களின் திதியை அறிந்து அந்த நாட்களில் நாம் பரிகாரம் செய்வது நன்று. அப்படித் தெரியவில்லை என்றால் அமாவாசை திதி மிகவும் சிறந்தது. அன்று பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுப்பது, கோ பூஜை செய்த பலன் தரும்.

இதற்கு மகாளய அமாவாசை மிகவும் சிறந்த நாள். பரிகாரம் செய்வதற்கும் ஏற்ற நாள். தாய் தந்தையர் இறந்த திதி அன்று திதி கொடுப்பது, அதனையும் வருடா வருடம் தவறாமல் திதி கொடுப்பது. அதேபோன்று அமாவாசை அன்று காகத்திற்கு தவறாமல் சாதம் வைக்கலாம். முன்னோருக்குப் பிடித்த உணவுகளையும் அமாவாசையன்று படைக்கலாம். இராமேஸ்வரம் மற்றும் காசி சென்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். 

அமாவாசை திதி அன்றோ அல்லது அவர்கள் இறந்த திதி அன்றோ ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் கொடுப்பது, திருமணமாகாத பெண்ணுக்கு தாலி வாங்கிக் கொடுத்பது,  செல்வந்தராக இருந்தாலும் ஒரு சில ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, புடவை வாங்கிக் கொடுப்பது, மாணவர்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுப்பது,

நம்மால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்வது உள்ளிட்ட செயல்களால் நமது சந்ததிகளுக்கு இந்த பித்ரு தோஷம் வராமல் தடுக்கலாம். முக்கியமாக மற்றவர்கள் மனம் நோகாமல் நடப்பது, வயதில் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுப்பது, அவர்களுக்கு உதவுவது, பிறருக்கு தீமை செய்யாமல் இருப்பது என்றிருந்தாலே பித்ரு தோஷம் நம்மை வந்து சேராது.