திருச்சி மாவட்டத்தில் ஓடும் காரிலிருந்து 19 வயது கர்ப்பிணி பெண்ணை அவரது தாய் தந்தையினர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் காருக்குள் இருந்து அலறிய 19 வயது கர்ப்பிணி பெண்..! லால்குடி செக்போஸ்டில் நடந்த அந்த சம்பவம்! தவித்துப்போன கணவன்!
மதுரை தத்தநேரி பகுதியை சேர்ந்தவர் கீதா. இவருக்கு வயது 19. திருச்சி மாவட்டத்தில் இருக்கும் லால் குடியை சேர்ந்த ஹரிஹரன் (வயது 24). ஹரிஹரன் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஹரிஹரனும் கீதாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரது காதலுக்கும் வீட்டில் ஒப்புதல் பெற முடியாது என்பதால் கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் மாரியம்மன் கோயில் தங்களது வீட்டினருக்கு தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்த கையோடு மணமக்கள் இருவரும் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தஞ்சம் புகுந்தனர். இவர்களிடம் நடந்ததைப் பற்றி விசாரித்த போலீசார் இரு வீட்டாரின் பெற்றோரையும் அழைத்து சமாதான படுத்தி கீதாவை, அவரது கணவர் ஹரிஹரன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். தற்பொழுது கீதா மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறார். நேற்று விருது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு கும்பல் உள்ளே நுழைந்து கீதாவை இழுத்து வந்து வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் கடத்தி சென்றது..
இதனை பற்றி தகவல் அறிந்த ஹரிஹரன் உடனடியாக லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட கீதாவை காதல் கடைசி இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது கீதாவின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவர்தான் அவரை கடத்தி சென்றுள்ளனர் என்பது ஊர்ஜிதமானது. இதனைத் தொடர்ந்து அந்த காரை போலீசார் துரத்திச் சென்றனர். கீதாவை கடத்தி சென்ற அந்த கார் துரவகுறிச்சி செக்போஸ்ட் தாண்டி சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் இடம் அந்த கார் சிக்கிக் கொண்டது. பின்னர் கீதாவையும் போலீசார் அந்த காரில் இருந்து மீட்டனர். அதுமட்டுமில்லாமல் கீதாவை கடத்திய அவரது தாய் விஜயகுமாரி (வயது 43), தந்தை மாரி ராஜன் ( வயது 57), மேலும் உறவினர்கள் கார் டிரைவர் உள்ளிட்ட ஆறு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்த பொழுது, தங்கள் மகள் காட்டில் ஹரிஹரனை திருமணம் செய்து கொண்டது பிடிக்கவில்லை என்பதால் அவரை கடத்த முயற்சி செய்ததாக அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.