உயிருக்கு போராடும் 16 வயது மகள்! சீக்கிரம் சாகட்டும் என காத்திருக்கும் கொடூர தாய் - தந்தை! நெஞ்சை உறைய வைக்கும் காரணம்!

தங்கள் சொந்த மகளையே காப்பாற்ற எண்ணமில்லாமல் அவர் சாவதற்காக பெற்றோரே காத்திருக்கும் சம்பவமானது பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பீகார் மாநிலத்தில் அவ்ஜிலி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு கஞ்சன் குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 16. இவர் இதுவரை அரசு பள்ளியில் படித்து வந்தார். தனியார் பள்ளியில் படிப்பதற்கு விரும்பிய சிலர் அதற்காக ஒரு தேர்வு எழுதினார். அந்த தேர்வில் அவர் முதலாவதாக தேர்ச்சி பெற்றார்.

சந்தோஷப்பட வேண்டிய சூழலில் இருந்த அந்த பெண்ணிற்கு அனைத்தும் தலைகீழாக மாறியது.  திடீரென்று அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைய தொடங்கியது. மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தபோது அவருடைய 2 சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

அவருக்கு உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் ஏழ்மையான குடும்பமாகும். ஆனால் அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக பெற்றோரின் சிறுநீரகங்களே மாற்று அறுவை சிகிச்சைகள் உபயோகப்படுத்தக்கூடிய தன்மையில் இருந்துள்ளன.

ஆனால் இதில் பேரதிர்ச்சி என்னவென்றால், பெற்றோர் இருவரும் அந்த பெண்ணுக்கு சிறுநீரகம் அளிக்க முன்வரவில்லை. தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள ஒரே காரணத்தினால் அவர்கள் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை என்று அக்கம்பக்கத்தினர்‌ புலம்புகின்றனர்.

அரசிடமிருந்து நிதி உதவி பெற்றாலும் பெண்னை காப்பாற்ற முடியும் என்று தெரிந்திருந்தும் அவர்கள் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. தங்களுக்கு பிறந்துள்ளது பெண் என்ற ஒரே காரணத்தினால் எவ்வளவு வழிகள் இருந்தும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அவரை காப்பாற்ற முன்வராதது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.