ஊரடங்கு நேரத்துல ட்யூசனுக்கா அனுப்புற? பெத்தவங்களை போலீசிடம் சிக்க வைத்த பொடியன்..! எங்கு தெரியுமா?

ஊரடங்கு காலத்திலும் வலுக்கட்டாயமாக தன்னை டியூஷனுக்கு அனுப்பியதால் 5 வயது சிறுவன் காவல் நிலையத்தில் புகாரளித்த சம்பவமானது பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பஞ்சாப் மாநிலத்தில் பட்டாலா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு 5 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். நாடு முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளபோதிலும், இவனுடைய பெற்றோர் இவனை வலுக்கட்டாயமாக டியூஷனுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடக்கத்திலிருந்தே வேண்டாவெறுப்பாக ஸ்டேஷன் சென்று வந்த இவன், ஒரு கட்டத்தில் தன்னுடைய பொறுமையை இழந்தான். அத்தொகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் சென்றுள்ளான்.

அவர்களிடம் ஊரடங்கு பொருட்படுத்தாமல் தன்னுடைய பெற்றோர் தன்னை வலுக்கட்டாயமாக டியூஷனுக்கு அனுப்பி வருவதாக கூறியுள்ளான். ஆகையால் பெற்றோர் மற்றும் ஆசிரியரை கைது செய்யுமாறும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளான்.

சிறுவன் என்று பார்க்காமல் காவல்துறையினர் முதலில் டியூசன் ஆசிரியை வீட்டிற்கு சென்று அவருக்கு அறிவுரை வழங்கினர். பின்னர் அந்த சிறுவனின் பெற்றோரிடம் சென்று ஊரடங்கை மதிக்குமாறும், குழந்தையை இதுபோன்று ஆளாக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.