3 வருடமா காதலிச்சோம்..! யாரும் புரிஞ்சிக்கல..! அதனால் இளம் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!

காதலுக்கு இரு வீட்டாரும் மறுப்பு தெரிவித்ததால் இளம் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் புக்கியா ஸ்ரீஷா மற்றும் லகாவத் மஹிபால் ஆகிய இளைஞர்கள் வசித்து வந்தனர். இருவரும் அம்மாநிலத்தில் உள்ள ஒரே கல்லூரியில் படித்து வந்தனர். அப்போது இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். 

நன்கு புரிந்து கொண்ட பிறகு தங்களுடைய காதலை இருவீட்டாரிடமும் தெரிவித்தனர். ஆனால் இரு குடும்பத்தினரும் இந்த காதலை நிராகரித்துவிட்டனர். இதனால் காதல் ஜோடி பெரிதும் மனமுடைந்து போயினர்.

நேற்று முன்தினம் இருவரும்  பொதுவெளியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சடலத்தை பார்த்த உள்ளூர் மக்கள் உடனடியாக அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதல் ஜோடி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.