எனக்கு 20 வயசு..! அவருக்கு 45 வயசு..! திருமணமான 3வது நாளில் மகாலெட்சுமி செய்த பகீர் செயல்!

தன்னைவிட 2 மடங்கு வயதானவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர் வற்புறுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது வேலூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய வயது 45. இவர் ஒரு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சாந்தகுமார் என்பவர் இவருடைய நண்பராவார். சாந்தகுமாருக்கு திருமணமாகி 20 வயதில் மகாலட்சுமி என்ற மகளிருந்தார்.

சங்கருக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று சாந்தகுமார்  முடிவெடுத்துள்ளார். ஆனால் மகாலட்சுமி இதனை ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் சாந்தகுமார் மஹாலக்ஷ்மி மிரட்டி தன்னுடைய முடிவுக்கு இணங்க வைத்துள்ளார்.

அதன்படி அவசர அவசரமாக சென்ற மாதம் 29-ஆம் தேதியன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் மகாலட்சுமி வேண்டா வெறுப்பாகவே அந்த திருமணத்தை செய்து கொண்டார். திருமணமாகி உன்னுடைய கணவன் வீட்டிற்கு சென்ற மகாலட்சுமி மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார்.

நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில், மன அழுத்தம் அதிகமான காரணத்தினால் மகாலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகாலட்சுமி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஷங்கர் மற்றும் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

பின்னர் மகாலட்சுமியின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது‌. மகாலட்சுமியின் சகோதரியான விஜயலட்சுமி தன்னுடைய பெற்றோர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.