17 வயதில் வேறு ஜாதி இளைஞருடன் திருமணம்! பெற்ற மகளை அடித்து, எரித்து ஆணவக் கொலை செய்த தந்தை! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டிருப்பது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திராவில் குப்பம் என்ற பகுதிக்கருகே ரெட்லப்பள்ளி எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் வெங்கடேஷ் என்பவர் தன் மனைவியான அமராவதியுடன் வாழ்ந்து வந்தார். இத்தம்பதியினருக்கு சந்தனா என்ற 17 வயது இளம்பெண் இருப்பது குறிப்பிடத்தக்கது ஓட்டுமரி பகுதியில் கட்டிட மேஸ்திரியாக பிரபு என்ற 19 வயது இளைஞன் பணியாற்றி வந்தார்.

சந்தனா பள்ளியில் படிக்கும்போதே பிரபு என்ற மாணவனுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் காதல் விவகாரம் சந்தனாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.

வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சந்தனாவின் பெற்றோர் இந்த காதலை வன்மையாக கண்டித்துள்ளனர். பெற்றோரின் துணையுடன் ஒன்று சேருவோம் என்று நினைத்திருந்த தம்பதியினருக்கு இது பெருத்த அடியாக அமைந்தது.

இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். 10-ஆம் தேதியன்று இருவரும் ஒன்றாக வீட்டை விட்டு வெளியேறினர். 11-ஆம் தேதியன்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இதனைக் கேள்விப்பட்ட சந்தனாவின் பெற்றோர் கடுமையாக ஆத்திரமடைந்தனர். மகளை பல்வேறு இடங்களில் தேடி வந்த பெற்றோர், இறுதியாக கண்டுபிடித்தனர். 

அவரை வீட்டிற்கு அழைத்து வந்து பிரபுவை மறந்து விடுமாறு பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் சந்தனா அதற்கு ஒப்பு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். தங்களுடைய விவசாய நிலத்திலேயே பெட்ரோல் ஊற்றி அந்தநாவிஇனால் உடலை எரித்துள்ளனர்.

தன் மனைவி காணாமல் போனதை அறிந்த பிரபு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரை பற்றிக்கொண்ட காவல்துறையினர் முதலில் சந்தனாவின் பெற்றோர் வீட்டில் விசாரணை நடத்தினர். 

ஆரம்பத்தில் சமாளிக்க தொடங்கிய பெற்றோரால், தொடர்ந்து சமாளிக்க இயலவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் தாங்கள் தான் சந்துருவை கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டனர். அவரை புதைத்த இடம் மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட இடங்களுக்கு காவல்துறையினர் சென்றனர்

தடயங்களை சேகரித்த காவல்துறையினர், இன்னும் சிலர் இந்த கொலை வழக்கில் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.