திருமணம் செய்து வைப்பதற்கு காலதாமதம் செய்து வந்ததால் இளைஞர் பெற்றோரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவமானது திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடுராத்திரி..! பெற்ற தாய் - தந்தை தலையில் அம்மிக் கல்லை தூக்கிப் போட்ட மகன்! அதிர வைக்கும் காரணம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட ஜீ குப்பாந்தாங்கல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவியின் பெயர் மாங்கினி. இத்தம்பதியினருக்கு ராஜ்குமார் என்ற மகனுள்ளார். ராஜ்குமார் கடந்த சில மாதங்களாகவே மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டு வந்தார்.
இதனால் பெற்றோர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு சுகுமார் பெற்றோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். பெற்றோரும் ராஜ்குமாரை சமாதானப்படுத்தி சமாளித்து வந்தனர்.
ஆனால் ராஜ்குமார் தினமும் பெற்றோரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பெற்றோர் உறங்கி கொண்டிருந்த நேரத்தில், ஆத்திரத்திலிருந்த ராஜ்குமார் வீட்டிலிருந்த அம்மிக்கல்லை எடுத்து பெற்றோரின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.
சம்பவமறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து பெற்றோரின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மேலும் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவமானது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.