பளபளப்பான முக அழகுக்கு பப்பாளி - பக்கவாதத்தை பக்கத்தில் வரவிடாது காலிஃப்ளவர் - தைராய்டு பிரச்னைகளை விரட்டியடிக்கும் செளசெள

பழங்களில் மிகக்குறைந்த கலோரி பப்பாளியில் இருக்கிறது. மேலும் வைட்டமின், ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்களும் உள்ளன.


·        

       

வாரம் இரண்டு நாட்கள் பப்பாளிப்பழத்தை முகத்திலும் தோலிலும் பூசி, வெந்நீரில் கழுவினால் முகம் மற்றும் தோல் பளபளப்பாக மாறிவிடும்.

·         அடிக்கடி பப்பாளி எடுத்துக்கொண்டால் உடலில் கொழுப்புச்சத்து மளமளவென குறைகிறது. வயிற்றுப்போக்கு, அல்சருக்கும் நல்ல மருந்து.

·         வைட்டமின் சத்துக்கள் நிறைய இருப்பதால் கண் பார்வையை கூர்மையாக்குகிறது.

·         தசை வளர்ச்சி மற்றும் ரத்தவிருத்திக்கும் உதவிபுரியும் பப்பாளியிடம் நோய் எதிர்ப்பு சக்தியும் நிரம்பவே இருக்கிறது.
பக்கவாதத்தை பக்கத்தில் வரவிடாது காலிஃப்ளவர்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் விரும்பக்கூடிய அற்புத சுவைகொண்ட காலிஃப்ளவரில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன.

·         ஒமேகா-3 அமிலங்களும், வைட்டமின் சத்துக்களும் நிரம்பியிருப்பதால் உடல்பருமன், நீரிழிவு, அழற்சி போன்ற பிரச்னைகளைத் தீர்க்கிறது.

·         காலிஃப்ளவரில் அல்லிசின் அதிகமாக இருப்பதால் பக்கவாதம், இதயக்கோளாறு நேராமல் பாதுகாக்கிறது.

·         மெக்னீசியம் மற்றும் வைட்டமின் நிரம்பியிருப்பதால் புற்றுநோய், தொற்றுநோய் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும்.

·         நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை அதிகப்படுத்தி ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றுகிறது.தைராய்டு பிரச்னைகளை விரட்டியடிக்கும் செளசெள

காய் விரும்பும் காட்டும் நபர்களுக்குக்கூட செளசெள அவ்வளவாக பிடிப்பதில்லை. இதில் வைட்டமின், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன.

·         வாரம் ஒரு முறை செளசெள சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. மேலும் இதில் கால்சியம் இருப்பதால் எலும்புகள் வலுப்பெற உதவுகிறது.

·         இந்தக் காயில் காணப்படும் காப்பர், மாங்கனீஸ் சத்து காரணமாக தைராய்டு நோய்க்கு எதிராக சிறப்பாக செயல்புரிகிறது.

·         நரம்புத்தளர்ச்சி மற்றும் உயர் ரத்தஅழுத்த பிரச்னைகளைக் கட்டுப்படுத்துவதுடன் கொழுப்பையும் குறைக்கிறது.

·         இவற்றில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய் செல்களைத் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. மேலும் தோல் சுருக்கத்தையும் சரிப்படுத்துகிறது.