பணத்திற்காக நண்பனை கடத்தி கொலை செய்துவிட்டு பாபநாகம் பட பாணியில் சடலத்தை மறைத்த மூன்று பேரை போலீசார் சிறப்பாக செயல்பட்டு கண்டுபிடித்துள்ளனர்.
பாபநாச திரைபட பாணியில் கொலை! செம்மையா துப்பறிந்து கொலையாளிகளை பிடித்த போலீஸ்!

கடந்த 28.01.2019ம் தேதி காலை 12 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம் காயார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீரப்பாக்கம் கிராமம் கல குவாரியில் ஒரு இளைஞரின் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து திருப்போரூர் ஆய்வாளர் கண்ணன் உடனடியாக சம்பவம் இடம் சென்று விசாரணை மேற் கொண்டதில் மேற்படி இறந்த நபர் சென்னை ஆதம்பாக்கம்,
நியூ காலனியை சேர்ந்த சரவணன் என்பது தெரிய வந்தது.
சரவணன் கடந்த 22.01.2019ம் தேதி வெளியில் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொள்ளப்பட்டது. பின்பு மேற்படி நபரின் செல் போன் என்னை ஆதம்பாக்கம் காவல்துறையினர் ஆய்வு செய்ததில் இறந்த நபரின் செல் போன் சம்பவ இடத்திற்கு அருகில் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது
தெரிந்தது.
கடந்த 26.01.2019ம் தேதி மேற்படி இறந்த நபரின் எண்ணில் இருந்து அவருடைய நண்பர் தன்ராஜ் என்பவரின் எண்ணிற்க்கு தனக்கு அவசராமக 5000 ரூபாய் தேவை படுவதாகவும் தனது நண்பன் அக்கவுன்டிற்க்கு அனுப்பி வைக்குமாறு அக்கவுன் எண் இல்லாமல் செய்தி வந்துள்ளது அதை தெடர்ந்து உறவினர்கள் நண்பர்கள் உடனடியாக பாண்டிச்சேரி சென்று தேடியுள்ளனர்
இந்நிலையில் தான் சரவணனின் உடல் கை கால்கள் கட்ட பட்ட நிலையில் கை மணிகட்டு தலை ஆகிய இடங்களில் கத்தியால் கிழித்த நிலையில் கல் குவாரி குட்டையில் இருந்து வெளியே வந்துள்ளது
குற்றபிரிவு தனிப்படை போலீசார் 26.01.19 ம் தேதி இறந்த நபரின் எண்ணில் இருந்து அவரது நண்பருக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி புதிய செல் போன் பயன்படுத்தப்பட்டதை கண்டுபிடித்து அந்த செல் போன் பற்றி விசாரணை செய்ததில் அது திருவள்ளுவர் மாவட்டம் போளிவாக்த்தை சேர்ந்த அரி என்று தெரியவந்தது.
அவரை பிடித்து விசாரணை செய்ததில் அரி தனது வீட்டில் பயன்படாத செல் போன் 4 இருந்ததாகவும் அதை கடந்த 26.01.2019ம் தேதி சென்னை மூர் மார்க்கெட் சென்று தெருவோர கடை ஒன்றில் கொடுத்து ஒரு பழைய செல் போன் வாங்கியதாக கூறினார்
உடனே குற்றபிரிவு தனிபடை சென்னை மூர்மார்க்கெட் சென்று அந்த கடையில் இருந்த கோபி என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அரி கொடுத்த நான்கு செல் போன்களில் ஒன்றை அதே 26.01.19ம் தேதி மதியம் மூன்று நபர்கள் கடைக்கு வந்து 500 ரூபாய்க்கு வாங்கி சென்றதாக கூறினார்
உடனே அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை கடைகாரரை கொண்டு ஆய்வு செய்ததில் செல் போன் வாங்கிய மூன்று நபர்களை அடையாளம் காண்பித்தார். மேலும் மேற்படி கொலை சம்பவத்தை மூடி மறைக்க பாபநாசம் பட பாணியில் செயல்பட்டதை தனிப்படையினர் கண்டுபிடித்தனர்.
இதை தொடர்ந்து தனிபடையினர் அதே பாணியில் விசாரணையை மேற் கொண்டு இறந்த நபரின் நண்பர்கள் உறவினர்கள் அவர்களுடைய நண்பர்கள் உறவினர்கள் செல் போன் எண்ணை ஆய்வு செய்ததில் மேற்படி கொலையில் கொலை செய்யப்பட்ட நபரின் நண்பர் ஆதம்பாக்கத்தை சேர்ந்த தீபன்சக்கரவர்த்தி மீது சந்தேகம் வந்தது.
அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவரும் அவரது நண்பர்களான கொலை நடந்த இடமான கீரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜேஸ் மற்றும் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த பார்த்திபன் ஆகியோர் சரவணனை கடத்தி கொலை செய்து பிணத்தை மறைத்து அவரது செல் போன் கொண்டு அவருடைய குடும்ப உறுப்பினர்களிடம் சரவணன் உயிருடன் உள்ளது போன்று தோற்றத்தை உருவாக்கி அதை வைத்து பணம் பெறலாம் என்று திட்டம் தீட்டியுள்ளனர்.
கடந்த 22.01.2019ம் தேதி மாலை மது அருந்த அழைத்துச் சென்று மது அருந்தி கொண்டிருந்த போது மூன்று பேரும் சேர்ந்து சரவணனை கொலை செய்து கல்லை கட்டி கல் குவாரியில் தள்ளிவிட்டுள்ளனர் பின்பு இறந்த நபரின் செல் போனை ஆன் செய்த போது போன் ஆன் ஆகததால் செல் போனை உடைத்து விட்டு சிம் கார்டை மட்டும் எடுத்து சென்றுள்ளனர்
இந்நிலையில் இறந்த நபரின் செல் போன் எண் சம்பவ இடத்திற்கு அருகில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதை காவல்துறை மூலம் அறிந்து உறவினர்கள் நண்பர்கள் தேடியதால் மாட்டி கொள்வோம் என்ற பயத்தில் பாபநாச பட பாணியில் ஒரு பழைய செல் போன் ஒன்றை வாங்கி பாண்டிச்சேரி சென்று இறந்த நபரின் சிம் கார்டை பயன்படுத்தியுள்ளனர்
மேலும் சரவணன் உயிரோடு இருப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டால் தப்பித்து விடலாம் என்று திட்டம் போட்டு அதே போல் மூன்று பேரும் கடந்த 26.01.19ம் தேதி மூர்மார்கெட் சென்று ஒரு பழைய செல் போன் ஒன்றை வாங்கி தீபன்சக்கரவர்த்தி மற்றும் பார்த்திபன் இருவர் மட்டும் பாண்டிச்சேரி சென்று குறுந்தகவல் அனுப்பிவிட்டு மீண்டும் ஊருக்கு வந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்
மேலும் காவல்துறையினர் தங்களது செல் போன் எண்ணை வைத்து கண்டுபிடித்து விட கூடாது என்று தீபன்சக்கரவர்த்தி மற்றும் பார்த்திபன் இருவரும் பாண்டிச்சேரி செல்லும் முன் தங்களது செல் போனை சுவிட்ச் ஆப் செய்ததாக தெரிவித்தனர். ஆனாலும் தமிழக காவல்துறை உருவாக்கிய மூன்றாம் கண் (CCTV) குற்றவாளிகளை காட்டி கொடுத்து விட்டது
இவ்வழக்கில்
சிறிய துப்பை கொண்டு சிறப்பாக செயல்பட்ட போலீசார் குற்றவாளிகளை கைது செய்து
அசத்தியுள்ளனர்.