சாப்பாடு இல்லை..! நடுத்தெருவுக்கு வந்த செய்திவாசிப்பாளர் பனிமலர் தந்தை..! உதவி கேட்டு ஏக்கம்! என்ன நடந்தது வீட்டில்?

பிரபல தொலைக்காட்சியில் பணிபுரியும் பனிமலரின் தந்தை அரசே எனக்கு சோறு போடு செலவுக்கு காசு கொடு என்று எழுதப்பட்ட போர்டை தனது கையில் வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.


பிரபல தனியார் தொலைக்காட்சிகளான நியூஸ் 7 மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்த பனிமலர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் எடிட்டராக பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சி மட்டுமல்லாமல் இவர் ஒரு யூடியூப் சேனலையும் நடத்திவருகிறார். அதுமட்டுமல்லாமல் தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் அமைப்புகளில் கலந்து கொண்டு சமூக கருத்துக்களை பேசி கலக்கி வருகிறார்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் வேலைக்கு செல்ல இயலாமல் உணவுக்கே திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் பணிபுரியும் பனிமலரின் தந்தை தனது கையில் ஒரு போர்டை வைத்து அதில் ஒரு தகவலை கூறியிருக்கிறார். அந்த போர்டில் அவர் வீட்டில் முழங்க சொல்லும் அரசே வயிற்றுக்கு சோறு போடு செலவுக்கு காசு கொடு என்று எழுதி அதை கையில் தாங்கி பிடித்துள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் தற்போது பணிமலரின் தந்தை ஏன் இந்த நிலைமைக்கு வந்தார் என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பனிமலர் நல்ல நிலைமையில் இருக்கும் போது அவரது தந்தையை ஏன் வீதிக்கு வர வைத்து விட்டார். தந்தையின் செலவிற்கு மகள் பணம் அனுப்பவில்லையா எனவும் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.